இந்தியா பிரிட்டனுடன் உடன் ஒரு விரிவான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA) கையெழுத்திட்டுள்ளது. உலகப் பொருளாதாரங்களுக்கு இடையிலான மிக முக்கியமான வர்த்தக ஒப்பந்தங்களில் ஒன்றாகக் கருதப்படும் இது, இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்க உள்ளது. இந்த ஒப்பந்தம், இங்கிலாந்தில் உற்பத்தி செய்யப்படும் முழுமையாக கட்டமைக்கப்பட்ட சொகுசு கார்கள் (CBU) மற்றும் மின்சார வாகனங்களின் (EV) இறக்குமதிச் செலவுகளைக் கணிசமாகக் குறைக்கும் என்பதால், இந்தியாவில் சொகுசு கார் சந்தை ஒரு புதிய உத்வேகத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலை குறையும் பிரிட்டிஷ் சொகுசு கார்கள்: புதிய FTA ஒப்பந்தம் ஒரு விரிவான கட்டண விகித ஒதுக்கீட்டு (TRQ) முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது 15 ஆண்டுகளுக்குப் படிப்படியான சுங்க வரி குறைப்புக்கு வழிவகுக்கும். இதன் மூலம், ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லி, ஜாகுவார், லேண்ட் ரோவர், ஆஸ்டன் மார்ட்டின் மற்றும் மெக்லாரன் போன்ற இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் சொகுசு கார்களின் விலைகள் இந்தியாவில் கணிசமாகக் குறையக்கூடும். தற்போது இந்திய சொகுசு கார் சந்தை மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி மற்றும் பி.எம்.டபிள்யூ போன்ற ஜெர்மன் நிறுவனங்களின் ஆதிக்கத்தில் இருந்தாலும், இந்த FTA மூலம் பிரிட்டிஷ் பிராண்டுகளின் சந்தைப் பங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ICE மற்றும் EV கார்களுக்கான வரி சலுகைகள்: உள் எரிபொருள் (ICE) கார்கள்: FTA-ன் கீழ், ICE கார்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நடுத்தர மற்றும் சிறிய எஞ்சின் பிரிவில் உள்ள கார்களுக்கு, முன்னர் 66% ஆக இருந்த அடிப்படை வரி, முதல் ஆண்டில் 50% ஆகக் குறைந்து, ஐந்தாவது ஆண்டில் 10% ஆக மாறும். அதேபோல், முன்னர் 110% ஆக இருந்த உயர் எஞ்சின் திறன் கொண்ட கார்களுக்கான வரி, முதல் ஆண்டில் 30% ஆகவும், பத்தாவது ஆண்டுக்குள் 10% ஆகவும் குறையும்.
இந்த சலுகை ஒரு குறிப்பிட்ட அளவிலான கார்களுக்கு மட்டுமே பொருந்தும். முதல் ஆண்டில் 20,000 ICE கார்கள் குறைக்கப்பட்ட வரியுடன் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும். இந்த எண்ணிக்கை ஐந்தாவது ஆண்டில் 37,000 யூனிட்டுகளாக அதிகரித்து, பின்னர் 15-வது ஆண்டில் இருந்து ஆண்டுக்கு 15,000 யூனிட்டுகளாக நிலைப்படுத்தப்படும்.
மின்சார வாகனங்கள் (EVs): மின்சார கார்கள், கலப்பினங்கள் மற்றும் ஹைட்ரஜன் செல் கார்களுக்குத் தனி TRQ கட்டமைப்பு உள்ளது. £40,000-க்கு அதிகமான CIF (செலவு, காப்பீடு மற்றும் சரக்கு) மதிப்புள்ள கார்களுக்கு மட்டுமே வரிச் சலுகைகள் கிடைக்கும். £80,000-க்கு மேல் விலை கொண்ட உயர் ரக மின்சார கார்களுக்கு, ஆறாவது ஆண்டில் 40% ஆகவும், பின்னர் பத்தாவது ஆண்டில் 10% ஆகவும் வரி குறைக்கப்படும். இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஆறாம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 4,400 மின்சார கார்கள் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும். இந்த எண்ணிக்கை 10வது ஆண்டில் 13,200 யூனிட்டுகளாகவும், 15வது ஆண்டில் இருந்து 22,000 யூனிட்டுகளாகவும் உயரும்.
இந்தியாவின் ஆடம்பர கார் சந்தை: இந்தியாவின் ஒட்டுமொத்த கார் சந்தையில் சொகுசு பிரிவு சிறியதாக இருந்தாலும், அதன் வளர்ச்சி வேகம் அதிகமாக உள்ளது. நிதி ஆண்டு 2025-ல், சொகுசு கார் விற்பனை 51,406 யூனிட்டுகளை எட்டி சாதனை படைத்தது. இது முந்தைய ஆண்டைவிட 3% அதிகமாகும். ஜெர்மன் பிராண்டுகளான மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் பி.எம்.டபிள்யூ சந்தையில் முன்னிலை வகித்தாலும், ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) 40% வளர்ச்சியைப் பதிவு செய்தது. இந்த FTA, இரண்டாம் நிலை நகரங்களில் இருந்து அதிகரித்து வரும் வாங்கும் திறன் மற்றும் புதிய தலைமுறை வாடிக்கையாளர்களின் பிராண்ட் விருப்பங்கள் ஆகியவற்றால் இந்த வளர்ச்சி மேலும் ஊக்கமடையும் என VST குழுமத்தின் தலைவர் அருண் சுரேந்திரா தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications