ஊர்ல இருக்கும் அத்தனை பணக்காரர்களும் ஜூலை 15க்காக வெயிட்டிங்.. ஏன் தெரியுமா?

இந்தியா பிரிட்டன் மத்தியிலான ப்ரீ டிரேட் ஒப்பந்தம் வருகிற ஜூலை 15ஆம் தேதி நடைமுறைக்கு வருகிறது, சரி இதற்கும் பணக்காரர்கள் காத்திருப்பதற்கும் என்ன தொடர்பு..? இந்த ப்ரீ டிரேட் ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவது மூலம் ஆட்டோமொபைல் சந்தையில் குறிப்பாக இறக்குமதி செய்யப்படும் ஆடம்பர கார்கள் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் நடக்கப்போகிறது.

ப்ரீ டிரேட் ஒப்பந்தம் ஆடிப்படையில் முதல் வருடம் சுமார் பிரிட்டன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அந்நாட்டு பிராண்ட் கார்களான ரோல்ஸ் ராய்ஸ், அஸ்டன் மார்டின், மெக்லரின், லேண்ட் ரோவர், ரேஞ்ச் ரோவர் போன்ற கார்களின் இறக்குமதி வரி 110 சதவீதத்தில் இருந்து வெறும் 30 சதவீதமாக குறைக்கப்பட உள்ளது.

ஊர்ல இருக்கும் அத்தனை பணக்காரர்களும் ஜூலை 15க்காக வெயிட்டிங்.. ஏன் தெரியுமா?

இந்த சிறப்பு சலுகையின் கீழ் முதல் வருடம் அதாவது ஜூலை 15ஆம் தேதி துவங்கும் நாளில் இருந்து சுமார் 20000 கார்களை இறக்குமதி செய்ய முடியும். இந்த கார்களை வாங்க பெரும் பணக்காரர்கள் போட்டிப்போட்டு புக்கிங் செய்து வருகின்றனர், இதேவேளையில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இதுவரையில் புதிய விலை பட்டியலை வெளியிடவில்லை என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள தகவல் படி அந்த வரி குறைப்பு மூலம் ஒரு காரின் விலை 1 - 3 கோடி ரூபாய் வரையில் குறைய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு ஆடம்பர கார்களின் விற்பனை இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் முக்கியமாக டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஜாகுவார் லேண்டுரோவர் நிறுவனம் புதிய விலை பட்டியலை வெளியிட்டு இருக்கும் வேளையில் Range Rover Sport SV மற்றும் Range Rover SV மாடல் கார்களின் விற்பனை அதிகரத்து JLR-ன் இந்த ஆண்டு 7-10 சதவீதம் வரையில் உயரும் என கணிக்கப்பட்டு உள்ளது.

தற்போது இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் கார்களின் விற்பனை அளவில் JLR-ன் பங்கு 3-4 சதவீதம் வரையில் மட்டுமே இருந்த நிலையில் இது பெரிய அளவில் உயர உள்ளது. இதன் மூலம் இந்த வருடம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஆடம்பர பிரிவில் கட்டயம் பிரிட்டன் கார்கள் முக்கிய இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் ஜெர்மன் கார் நிறுவனங்களின் வர்த்தகம் அதிகளவில் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+