இந்தியா மற்றும் பிரிட்டன் இடையே நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சமூக பாதுகாப்பு ஒப்பந்தம் (Social Security Agreement) இந்த வாரம் சைலெண்டாக கையெழுத்தானது.
மத்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் பிரிட்டிஷ் உயர் ஆணையர் லிண்டி கேமரூன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் இந்தியாவில் இருந்து பிரிட்டன் நாட்டில் குறுகிய காலத்திற்கு பணியில் அமர்த்தப்படும் (short-term assignments) ஊழியர்களுக்கு விதிக்கப்படும் இரட்டை சமூக பாதுகாப்பு பங்களிப்பை (double contributions) முடிவுக்கு கொண்டுவருகிறது.

இந்திய ஊழியர்களுக்கு பலன்
இந்த ஒப்பந்தத்தின்படி, இந்திய ஊழியர்கள் பிரிட்டனில் 36 மாதங்கள் வரை தற்காலிக பணிக்கு அனுப்பப்பட்டால், இந்தியாவின் சமூக பாதுகாப்பு திட்டத்தில் (EPF, ESI போன்றவை) மட்டுமே பங்களிப்பு செய்ய வேண்டும். பிரிட்டன் சமூக பாதுகாப்பு திட்டத்தில் (National Insurance) பங்களிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல் பிரிட்டன் ஊழியர்கள் இந்தியாவில் பணியாற்றும்போதும் இதே விதி பொருந்தும்.
TCS, Infosys-க்கு ஜாக்பாட்
இந்த ஒப்பந்தம் இந்திய ஐடி துறைக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமைந்துள்ளது. TCS, Infosys, Wipro, HCL Tech போன்ற நிறுவனங்கள் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பிரிட்டனுக்கு தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்க அனுப்பி வருகின்றன. முன்பு இந்த ஊழியர்களுக்கு இரு நாடுகளிலும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு (double contribution) செய்ய வேண்டியிருந்தது.
இதனால் நிறுவனங்களுக்கு கூடுதல் செலவும், நிர்வாக சிக்கல்களும் ஏற்பட்டன. இப்போது 36 மாதங்கள் வரை இந்த இரட்டை செலவு தவிர்க்கப்படும். இதனால் நிறுவனங்களின் இயக்க செலவு குறையும், லாப வீதம் (profit margins) மேம்படும், உலகளாவிய பணியாளர் மேலாண்மை எளிதாகும். ஏஐ மூலம் ஏற்படும் லாப சரிவை இந்த ஒப்பந்தம் மூலம் சிறிய அளவு மேம்படுத்த முடியும்.
75,000 இந்திய ஊழியர்களுக்கு நேரடி பயன்
வெளியுறவு அமைச்சகம் (MEA) தெரிவித்துள்ளபடி, இந்த ஒப்பந்தம் மூலம் பிரிட்டனில் தற்காலிக பணியில் உள்ள சுமார் 75,000 இந்திய ஊழியர்களுக்கு நேரடி பயன் கிடைக்கும். நிதி சுமை குறைவதோடு, சமூக பாதுகாப்பு (pension, health benefits) தொடர்ச்சியாக கிடைக்கும். இது இந்தியா-பிரிட்டன் இடையேயான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும். இந்த ஒப்பந்தம் இந்திய ஐடி துறைக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications