மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர் சூழ்நிலை உலகளாவிய எரிசக்தி மற்றும் உணவு பாதுகாப்பில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இந்த போர் காரணமாக இயற்கை எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டதால், இந்தியாவில் உர உற்பத்திக்கும் சிக்கல் உருவாகியுள்ளது.
இந்த சூழ்நிலையில், விவசாய உற்பத்தி பாதிக்கப்படாமல் இருக்க இந்தியா சீனாவிடம் யூரியா இருப்பை விற்பனை செய்ய கோரியுள்ளது.

இயற்கை எரிவாயு தட்டுப்பாடு
உர உற்பத்தியில் முக்கிய மூலப்பொருளாக இயற்கை எரிவாயு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக யூரியா போன்ற நைட்ரஜன் அடிப்படையிலான உரங்களை தயாரிக்க LNG (Liquefied Natural Gas) முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் மத்திய கிழக்கில் நடைபெறும் போர் காரணமாக உலகளாவிய LNG விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் சில உர ஆலைகளின் செயல்பாட்டை பாதிக்கத் தொடங்கியுள்ளது. எரிவாயு கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலால் தென் ஆசியாவின் முக்கிய விவசாய நாடாக இருக்கும் இந்தியாவில் சில உர உற்பத்தி நிலையங்கள் தற்காலிகமாக செயல்பாட்டை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவிடம் உதவி கோரிய இந்தியா
இந்த நிலையை சமாளிக்க இந்திய அதிகாரிகள் சீன அரசின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தற்போது சீனா உர ஏற்றுமதியில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், அந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி இந்தியாவுக்கு சில யூரியா கார்கோ-வை விற்பனை செய்ய அனுமதி வழங்குமாறு இந்தியா கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடர்ந்துவருகின்றன. இருப்பினும், இந்த கோரிக்கைக்கு சீனா இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என தகவல்கள் கூறுகின்றன.
போர் தாக்கம்
அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்கள் மற்றும் ஈரான் தொடர்பான மோதல்கள் காரணமாக உலகளாவிய வர்த்தகத்திலும் சிக்கல்கள் உருவாகியுள்ளன. எரிசக்தி விநியோகம் மட்டுமல்லாமல் உணவு உற்பத்திக்கும் தேவையான முக்கிய மூலப்பொருட்களின் கிடைப்பிலும் இந்த போர் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக பல நாடுகள் தங்களுக்கு தேவையான முக்கிய பொருட்களை பாதுகாப்பாக பெற புதிய வழிகளைத் தேடி வருகின்றன. இந்தியா சீனாவிடம் யூரியா விற்பனை அனுமதி கோரியிருப்பதும் அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
யூரியா விலை ஏற்றம்
உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் நைட்ரஜன் அடிப்படையிலான உரமான யூரியாவின் விலைவும் இந்த போர் காரணமாக வேகமாக உயர்ந்துள்ளது. போர் தொடங்கிய முதல் வாரத்திலேயே சர்வதேச சந்தையில் யூரியா விலை சுமார் 21% வரை உயர்ந்து, கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகமாகியுள்ளது.
விவசாய உற்பத்தி மீது கவலை
யூரியா என்பது உலகளாவிய உணவு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் உரமாகும். குறிப்பாக இந்தியா போன்ற விவசாய நாடுகளில் இது மிக அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
எனவே யூரியா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டால் அது நேரடியாக விவசாய உற்பத்திக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இதை தொடர்ந்து உணவு பொருட்களின் விலை உயரும். இதைத் தவிர்க்க இந்தியா முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து, சர்வதேச சந்தையில் இருந்து தேவையான உரத்தை உறுதி செய்ய முயற்சித்து வருகிறது.
More From GoodReturns

சீன CCTV கேமராக்களுக்கு மொத்தமாக செக்.. மத்திய அரசின் புதிய முடிவு..!!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications