டெல்லி: இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சு வார்த்தை தீவிரம் அடைந்து வரும் நிலையில் ஜூலை மாத தொடக்கத்திற்குள் இரு நாடுகளுக்கு இடையேயான முதல் கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து ஆகிவிடும் என பிசினஸ் டுடே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது.
இதற்காக மத்திய வணிகத்துறை அமைச்சரான பியூஸ் கோயல் தலைமையிலான குழு எதிர்வரும் நாட்களில் அமெரிக்காவின் வாஷிங்டன் நகருக்கு பயணம் செய்ய இருக்கிறது. அங்கே அமெரிக்க அதிகாரிகளுடன் வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபட இருக்கிறது. கடந்த ஏப்ரல் இரண்டாம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் போட்டி வரி விதிப்பதாக அறிவிப்பு வெளியிட்டார்.

இந்தியா அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 52 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கிறது. உலகிலேயே இந்தியா தான் அமெரிக்க பொருட்களுக்கு அதிகபட்ச வரி விதிக்கிறது என குற்றம் சாட்டி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பொருள்களுக்கு 26 சதவீத வரியை விதித்தார். பின்னர் ஏப்ரல் 10ஆம் தேதி இந்திய பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரிக்கு ஜூலை 9ஆம் தேதி வரை தள்ளி வைப்பதாக ஒரு அறிவிப்பினை வெளியிட்டார். இதனை அடுத்து மத்திய அரசு அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு தீவிரம் காட்டி வருகிறது.
அதிகாரிகள் மட்டத்தில் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த வியாழக்கிழமை அன்று பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து தீவிரமாக பேசி வருகிறது கூடிய விரைவில் பெரும்பாலான அமெரிக்க பொருட்களுக்கு இந்தியாவில் இறக்குமதி வரியே இல்லாத சூழல் உண்டாகும் என்ற ஒரு தகவலை வெளியிட்டு இருந்தார். இருநாட்டு அதிகாரிகளும் கூட வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை பாசிட்டிவான முறையில் சென்று வருவதாக தொடர்ந்து கூறி வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற வருகின்றன, இந்த பேச்சுவார்த்தை மிகவும் சிக்கலான ஒன்றாக இருக்கிறது இதுவரை எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்றார். இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் பலன்கள் இருந்தால் மட்டும்தான் இந்த ஒப்பந்தம் என்பது கையெழுத்தாகும் எனக் கூறியிருந்தார் . இதற்காக ஒரு குழுவினர் அமெரிக்காவிற்கு செல்ல உள்ளனர் என்ற தகவலையும் அவர் வெளியிட்டு இருந்தார்.
இந்த சூழலில் தான் வரும் ஜூலை மாதத்திற்கு உள்ளாகவே இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான முதல் கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து ஆகிவிடும் என பிசினஸ் டுடே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது.


Click it and Unblock the Notifications