அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு டொனால்டு டிரம்ப் தினமும் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு பதிலுக்கு பதில் வரி விதிப்பதாக மிரட்டி வருகிறார். அவரது வரிவிதிப்பு அறிவிப்புகளால் கனடா, மெக்ஸிகோ, ஐரோப்பிய நாடுகள், சீனா கடும் அதிருப்தி அடைந்துள்ளன.இந்தியாவும் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக டிரம்ப் தொடர்ந்து குறை கூறி வருகிறார். அனைத்துலக வர்த்தகப் பங்காளிகளுக்குமான கூடுதலான வரிவிதிப்புகள் அடுத்த 90 நாள்களுக்குத் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்தார்.
இருந்தபோதும், அவர் ஏற்கெனவே விதித்துள்ள 10 விழுக்காடு அடிப்படை வரிகள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும். ஆனாலும், சீனாவுக்கும் - அமெரிக்காவுக்குமான வர்த்தக போர் ஓய்ந்தப்பாடில்லை. இந்த நாட்டின் மீது 145 சதவீதம் வரியை ட்ரம்ப் விதித்துள்ளார். பதிலுக்கு 125 சதவீத வரியை அமெரிக்க பொருட்கள் மீது சீனா விதித்துள்ளது.

இத்தகைய நடவடிக்கையால் சீனாவின் பொருளாதாரம் ஆட்டம் காணும். உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவும்,சீனாவும் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையை 6 மாதம் தொடர்ந்தாலே, இருநாடுகளின் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிப்படையும். அதனால் உலக பொருளாதாரமும் சீர்குலையும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
இந்தநிலையில், இந்தியா மற்றும் அமெரிக்கா இருநாட்டு வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்ட ஒப்பந்த விதிமுறைகளில் கையெழுத்திட்டுள்ளன என்று இந்திய வர்த்தக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். அதாவது, இந்தியா மற்றும் அமெரிக்கா, இருநாட்டு வர்த்தகத்தை 2030க்குள் $500 பில்லியன் ஆக உயர்த்தும் நோக்கில், இந்த ஆண்டின் இறுதியில் முடிக்கவுள்ள வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்ட பணிகளை தொடங்க பிப்ரவரியில் ஒப்புக்கொண்டன. அதாவது, 2030க்குள் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மதிப்பை 500 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (660 பில்லியன் வெள்ளி) உயர்த்த அவ்விரு நாடுகளும் பிப்ரவரியில் ஒப்புக்கொண்டன.


Click it and Unblock the Notifications