லட்சக்கணக்கான இந்திய ஏற்றுமதியாளர்கள் காத்திருக்கும் இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இரு நாடுகளும் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன. இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே முதல் கட்ட வர்த்தக ஒப்பந்தம் கிட்டத்தட்ட தயாராகிவிட்டது. கூடிய விரைவில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது.
இடைக்கால வர்த்தகம் ஒப்பந்தம் தொடர்பான கூட்ட அறிக்கையை இறுதி செய்தி இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. இதன் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி பரஸ்பரம் மற்றும் இருதரப்புக்கும் நன்மை பயக்கும் வர்த்தகம் தொடர்பான இடைக்கால ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து முழுமையான ஒப்பந்தம் செய்யப்படுவது தொடர்பாக இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சு வார்த்தைகளை நடத்தும்.

இந்த இடைக்கால ஒப்பந்தத்தின் படி அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 50 சதவீத வரியை நீக்கி 18 சதவீதமாக குறைக்கும். அதே போல அமெரிக்காவின் பல்வேறு பொருட்களுக்கும் இந்தியா இறக்குமதி வரியை குறைக்க இருக்கிறது. இது இறுதியான வர்த்தக ஒப்பந்தம் கிடையாது. இது ஒரு இடைக்கால ஒப்பந்தம் தான். படிப்படியாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு அதன் பின்னர் தான் இறுதியான வர்த்தக ஒப்பந்தம் என்பது ஏற்படுத்தப்பட உள்ளது.
அமெரிக்க தொழில்துறை பொருட்கள் மற்றும் வேளாண் பொருட்களுக்கு இந்தியா வரியை குறைக்கிறது. குறிப்பாக விலங்குகளுக்கான தீவனம் மற்றும் பழங்கள், சோயாபீன் எண்ணெய், வைன் மற்றும் மதுபானங்களுக்கு இந்திய சந்தையில் வாய்ப்பு கிடைக்கும். அதே வேளையில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படக்கூடிய அனைத்து பொருட்களுக்கும் அமெரிக்கா 18 சதவீத வரி மட்டுமே விதிக்கும்.
இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியாவிற்கு என்ன பலன் என பார்த்தால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படக்கூடிய துணிமணி மற்றும் ஆடைகள், தோல் பொருட்கள், காலணிகள், பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொருட்கள், ஆர்கானிக் ரசாயனங்கள், வீட்டு அலங்கார பொருட்கள் மற்றும் இந்தியாவை சேர்ந்த கைவினைப் பொருட்கள், குறிப்பிட்ட வகையிலான இயந்திரங்களுக்கு அமெரிக்க சந்தையில் இனி 18% வரிதான். முன்பு இருந்த 50% வரி 18 ஆக குறைவதால் அமெரிக்க வாடிக்கையாளர்கள் மற்ற நாடுகளை விடுத்து இந்தியாவிடம் தான் இந்த பொருட்களை அதிக அளவில் இறக்குமதி செய்வார்கள்.
இந்த துறைகள் அனைத்துமே இந்தியாவில் அதிக அளவில் வேலை வாய்ப்புகளை தரக்கூடிய துறைகள் என்பதால் ஏற்றுமதி துறையில் வர்த்தகத்தை மேம்படுத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இடைக்கால ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு அமெரிக்காவில் இந்தியாவின் ஜெனரிக் மருந்துகள், நவரத்தினங்கள் மற்றும் வைரங்கள், விமான பாகங்களுக்கு மேலும் வரி விலக்கு கிடைக்கப் போகிறது.
பதிலுக்கு இந்தியா அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படக்கூடிய வாகன உற்பத்தி பாகங்கள் மற்றும் மருந்துகளுக்கு வரியை குறைக்க இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா 500 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான அமெரிக்க பொருட்களை வாங்க திட்டமிட்டு இருக்கிறதாம். எரிசக்தி துறை, விமான பாகங்கள் ,தொழில்நுட்ப பொருட்கள் ,அரிய வகை உலோகங்கள் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.
இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த மூலம் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு 30 டிரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட சந்தை வாய்ப்பு கிடைக்க உள்ளது என மத்திய வணிகத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்திருக்கிறார். ஏற்றுமதி அதிகரிப்பதன் நம் நாட்டில் லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எனக் கூறியிருக்கிறார். இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டம் வலுப்படுத்தப்படும் என தெரிவித்திருக்கிறார்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications