இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே எப்போது வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதுமே எழுந்திருக்கிறது. இந்த நிலையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த மிக முக்கியமான ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
இந்தியாவில் அதிகமானவர்களுக்கு வேலை வாய்ப்பு தரக்கூடிய துறைகளாக ஜவுளி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தி துறைகள் திகழ்கின்றன. இந்த துறைகள் உற்பத்தி செய்யக்கூடிய ஜவுளி மற்றும் தோல் சம்பந்தப்பட்ட பொருட்கள் பெரும்பாலும் அமெரிக்க சந்தையை தான் சார்ந்து இருக்கின்றன. ஆனால் கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதிப்பதாக தெரிவித்திருந்தார். இது இந்தியாவை சேர்ந்த ஏற்றுமதி துறை சார்ந்த இயங்கக் கூடியவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டில் திருப்பூர் ,கோயம்புத்தூர் ,ஈரோடு ,கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்களும் ராணிப்பேட்டை ,வேலூரில் மாவட்டங்களை சேர்ந்த தோல்பொருள் மற்றும் காலணி உற்பத்தியாளர்களும் இந்த வரி விதிப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கானவர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பாக ஒரு ஆண்டு காலமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தாலும் அதில் தொடர்ந்து இழப்பறி நீடித்து வந்தது.
இந்த நிலையில் தான் கடந்த இரண்டாம் தேதி அன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய பொருட்களுக்கான இறக்குமதி வரியை 18 சதவீதமாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டார். இது இந்தியாவை சேர்ந்த லட்சக்கணக்கான ஏற்றுமதியாளர்களுக்கும் அதை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கும் பெரும் நிம்மதியை ஏற்படுத்தி தந்தது. அதோடு கூடிய விரைவில் இந்தியாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக போகிறது என்ற தகவலும் வெளியானது.
இந்த நிலையில் மத்திய வணிகத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே மார்ச் மாதம் மத்தியிலேயே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்ற தகவலை வெளியிட்டு இருக்கிறார். இது தொடர்பாக இரு நாடுகளும் அடுத்த நான்கு முதல் ஐந்து நாட்களுக்குள் கூட்டறிக்கை வெளியிடப் போகிறது என்ற தகவலையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.
இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த முதல் கட்ட உடன்பாடுகள் குறித்து அடுத்த நான்கு - ஐந்து நாட்களுக்குள் அதிகாரப்பூர்வமாக கூட்டறிக்கை வெளியிடப்படும் என கூறியிருக்கிறார். அதன் பின்னர் இந்தியாவிற்கான இறக்குமதி வரியை 18% என குறைக்கும் ஆணையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்து இடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டறிக்கை தான் இரு நாடுகளுக்கும் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கான அதிகாரபூர்வமான முதல் படி எனக் கூறியிருக்கும் அவர் மார்ச் மாத மத்தியில் ஒப்பந்தமே கையெழுத்து ஆகிவிடும். இதனை அடுத்து படிப்படியாக அது நடைமுறைப்படுத்தப்படும் என கூறியிருக்கிறார்.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications