இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையேயான நள்ளிரவு போன் கால் மாத கணக்கில் இழுத்து வந்த வர்த்தக பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளன. இரு தலைவர்களும் இதை "வரலாற்று சிறப்பு மிக்க வர்த்தக ஒப்பந்தம்" என்று குறிப்பிட்டு உள்ளனர். இந்த ஒப்பந்தம் இந்தியா-அமெரிக்க பொருளாதார உறவுகளை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் இந்தியா அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கும் வரி மற்றும் வரி அல்லாத தடைகளை படிப்படியாக குறைத்து பூஜ்ஜியத்துக்கு கொண்டு செல்வது தான். இதனால் இந்தியாவில் அமெரிக்க பொருட்களின் விலை கணிசமாக குறையும்.

India-US Trade Deal: விலை குறையும் பொருட்களின் லிஸ்ட்
இந்த ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வரும் பருப்பு வகைகள், பால் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற விவசாய பொருட்கள் மலிவாக கிடைக்கும்.
இதேபோல் லேப்டாப், கேஜெட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பேக்கேஜ்டு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றின் விலை குறையும் வாய்ப்பு உள்ளது. இது உணவு பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மக்களுக்கு பெரும் நிவாரணமாக அமையும்.
India-US Trade Deal: இந்திய ஏற்றுமதி துறைக்கு என்ன லாபம்?
அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா 0 சதவீத வரி பலன் கொடுத்தாலும். டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 18 சதவீதம் வரியை தொடர்ந்து விதித்துள்ளார். இது 50 சதவீத வரியில் இருந்து குறைக்கப்பட்டாலும், சமமான வரி விதிப்பு கிடையாது என்பது தான் உண்மை. அமெரிக்கா இந்தியா உடன் மட்டும் அல்லாமல் ஐரோப்பா, பிரிட்டன், ஜப்பான், வியட்நாம் உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் இதேபோன்ற ஒப்பந்தத்தை தான் செய்துள்ளது.
ஆயினும் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கும் இந்த ஒப்பந்தம் பெரும் பயனளிக்கும். அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு விதிக்கும் 18 சதவீதமாக குறைப்பது மூலம் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் டெக்ஸ்டைல் மற்றும் ஆடை, ரத்தினம் மற்றும் நகை, எஃகு, கெமிக்கல், பொறியியல் பொருட்கள் போன்ற துறைகள் குறைந்த விலையில் பொருட்களை ஏற்றுமதி செய்யும். இந்திய ஏற்றுமதியாளர்களின் அமெரிக்க சந்தையில் வர்த்தகம் செய்வது பழைய நிலைக்கு திரும்பும் (வரி விதிப்புக்கு முன் இருந்த நிலை).

India-US Trade Deal: முக்கிய துறைகளுக்கு செக்
ஆனால் சில துறைகளில் வரி தொடரும். அமெரிக்காவின் செக்ஷன் 232 விதிகளின் கீழ் எஃகு, அலுமினியம், தாமிரம் ஆகியவற்றுக்கு சுமார் 50 சதவீத வரி தொடரும். சில ஆட்டோமொபைல் உதிரிபாகங்களுக்கு 25 சதவீத வரி நீடிக்கும்.
இதேபோல் இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா அமெரிக்காவிலிருந்து 500 பில்லியன் டாலருக்கும் மேல் எனர்ஜி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி உள்ளிட்ட பொருட்களை வாங்க ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் இந்தியாவில் உள்ள உணவு பணவீக்கத்தை கட்டுப்படுத்த உதவும். அமெரிக்க பொருட்கள் மலிவாவதால் நுகர்வோர் பயனடைவர். இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு இழந்த சந்தையை மீண்டும் பெற வாய்ப்பு உருவாகும்.
More From GoodReturns

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

டிரம்ப் செய்யும் தில்லுமுல்லு.. உண்மையை உடைத்த ஈரான் தலைவர்..!

ஈரானுக்கு 48 மணி நேர கெடு விதித்த டிரம்ப்..!! பதிலுக்கு வஜ்ராயுதத்தை கையில் எடுத்த ஈரான்..!!

யாருடைய கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி? அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லும் புது கணக்கு

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!



Click it and Unblock the Notifications