இந்தியா-அமெரிக்கா மத்தியிலான வர்த்தக ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டதாக மோடி, டிரம்ப் உறுதியளித்த நிலையில், இந்தியாவும் அமெரிக்காவும் சமீபத்தில் ஒரு இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் (interim trade agreement) செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளன. இது இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகத்தை சமநிலைப்படுத்தவும், பொருளாதார உறவுகளை வலுப்படுத்தவும் உதவும் முதல் படியாகும்.
இந்த ஒப்பந்தத்தில் இந்தியா அமெரிக்காவின் முக்கிய விவசாய மற்றும் டெய்ரி பொருட்களுக்கு கதவுகளை திறந்து இறக்குமதி செய்ய அனுமதிக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் இந்தியா இவற்றை முழுமையாக தடுத்து நிறுத்தி வைத்துள்ளது.
இன்று இந்தியா டுடே நேர்காணலில் பேசிய மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் இந்தியாவுக்கு Sensitive ஆன பொருட்களுக்கு அமெரிக்காவுக்கு திறப்பதில் "எந்த சமரசமும் இல்லை" என்று தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு win-win என்று அவர் வலியுறுத்தினார். சரி, விவசாய துறையில் இந்த ஒப்பந்தம் மூலம் எவற்றுக்கெல்லாம் கதவுகள் திறக்கப்பட்டு உள்ளது.

இந்தியா எதை தடுத்து வைத்துள்ளது?
இந்தியா அமெரிக்காவிலிருந்து முழு சோயாபீன், சோளம், எரிபொருள் எத்தனால் (பெட்ரோலில் கலக்க பயன்படும்), பால் பொருட்கள், கோழி இறைச்சி, பருத்தி போன்றவற்றை இறக்குமதி செய்ய அனுமதிக்கவில்லை. இவை இந்திய விவசாயிகளுக்கு மிக முக்கியமானவை.
அமெரிக்காவில் பெரும்பாலான இவை மரபணு மாற்றப்பட்ட (GM) பயிர்களாக இருப்பதால், உணவு பாதுகாப்பு விதிகள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி இந்தியா இவற்றை தடுத்துள்ளது. பால் பொருட்களுக்கு அமெரிக்க பசுக்கள் விலங்கு அடிப்படையிலான உணவு கொடுக்கப்படுவதும் ஒரு காரணம்.
எதற்கு இறக்குமதி எளிதாக்கப்பட்டது?
இந்தியா சில அமெரிக்க விவசாய பொருட்களுக்கு இறக்குமதி வரியை குறைத்து அல்லது நீக்கி இந்திய சந்தையை அணுக எளிதாக்கியுள்ளது. இதில் முக்கியமானவை:
DDGS (Distiller's Dried Grains with Solubles) - கால்நடை தீவனம்
சோயாபீன் எண்ணெய்
சிவப்பு சோளம் (red sorghum / jowar) - கால்நடை தீவனத்திற்கு
பாதாம், வால்நட், பிஸ்தா போன்ற Tree Nuts
பழங்கள் (புதிய மற்றும் பதப்படுத்தப்பட்டவை)
வைன் மற்றும் ஸ்பிரிட்ஸ்
சில கூடுதல் பொருட்கள்
மர நட்ஸ் மற்றும் பழங்கள் போன்றவை இந்தியாவில் பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படாததால், இவை விவசாயிகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. இந்தியா ஏற்கனவே அமெரிக்காவில் பாதாம், வால்நட், பிஸ்தா ஆகியவற்றை மிகப்பெரிய அளவில் வாங்கி வருகிறது.

DDGS என்றால் என்ன? ஏன் இது முக்கியம்?
DDGS என்பது எத்தனால் உற்பத்தியின் போது உருவாகும் உப பொருள். சோளம் அல்லது அரிசியை புளிக்க வைத்து எத்தனால் எடுத்த பின் மீதமுள்ள தானியத்தை உலர்த்தி DDGS ஆக்குகின்றனர். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் எண்ணெய் புண்ணாக்கு. எண்ணெய் மற்றும் எரிபொருள் எடுத்த பின்பு கிடைக்கும் கழிவு தான் இந்த புண்ணாக்கு..
இந்த எண்ணெய் புண்ணாக்கு புரதம் நிறைந்தது என்பதால் கோழி, மாடு, மீன் வளர்ப்புக்கு முக்கிய தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் தற்போது சோயாபீன் மீல் (soyabean meal) அல்லது எண்ணெய் கேக் பயன்படுத்தப்படுகிறது. இதன் விலை கிலோவுக்கு ரூ.43-44.
ஆனால் அமெரிக்க DDGS ரூ.24-30 வரை கிடைக்கலாம், ஒவ்வொரு தாணியத்தை பயன்படுத்தும் போது புரத அளவு மாறுப்படும், இதில் புரத அளவை சரிசெய்தாலும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் புண்ணாக்கு விலை மிக குறைவு. இதனால் கோழி, மாடு, மீன் வளர்ப்போருக்கு செலவு குறையும், ஆனால் சோயாபீன் விவசாயிகளுக்கு விலை குறைவு ஏற்படலாம்.

சிவப்பு சோளம் மற்றும் சோயாபீன் எண்ணெய்
அமெரிக்க சிவப்பு சோளத்திற்கு இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது, இது கால்நடை தீவனத்திற்கு உதவும். அமெரிக்கா உலகின் மிகப்பெரிய சோளம் ஏற்றுமதி செய்யும் நாடு.
சோயாபீன் எண்ணெய்க்கு வரி குறைப்பு செய்யப்பட்டு உள்ளது, இதனால் இறக்குமதியை அதிகரிக்கலாம். இந்தியாவில் சோயாபீன் 1.3 கோடி ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது, இதில் முக்கியமாக மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாவட்டத்தில் பியிரடப்படுகிறது.
ட்ரீ நட்ஸ் மற்றும் பழங்கள்
இந்தியா-அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்காவிலிருந்து பாதாம் (Almonds), வால்நட் (Walnuts), பிஸ்தா (Pistachios) போன்ற ட்ரீ நட்ஸ்களுக்கு இறக்குமதி வரி குறைக்கப்படவுள்ளது. இந்தியாவில் இவை பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படாததால், உள்ளூர் விவசாயிகளுக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று கருதப்படுகிறது.
இந்தியா ஏற்கனவே அமெரிக்க மர நட்ஸ்களின் உலகின் மிகப்பெரிய வாங்குபவர் ஆக உள்ளது. 2025-இல் அமெரிக்கா மர நட்ஸ்களை 10 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி செய்தது, இதில் இந்தியா மட்டும் 1.5 பில்லியன் டாலர் மதிப்புக்கு வாங்கியுள்ளது. தற்போது கொடுக்கப்பட்டும் வரி குறைப்பால் இந்த இறக்குமதி மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
புதிய மற்றும் பதப்படுத்தப்பட்ட பழங்களுக்கும் இறக்குமதி வரி குறைக்கப்படுவதால், நுகர்வோருக்கு இவை மலிவாக கிடைக்கும். இது இந்திய சந்தையில் போட்டியை அதிகரிக்கும் என்றாலும், உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு பெரிய அச்சுறுத்தல் இல்லை என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.
யார் பாதிக்கப்படலாம்?
அமெரிக்காவில் இருந்து அதிகளவில் இந்தியாவுக்கு சோயாபீன் வந்தால் இந்தியாவில் இருக்கும் சோயாபீன் விவசாயிகள் மற்றும் சோயாபீன் பதப்படுத்தும் ஆலைகள் பாதிக்கப்படலாம். DDGS இறக்குமதி அதிகரித்தால் இந்தியாவில் உருவாகும் சோயாபீன் புண்ணாக்கிற்கு தேவை குறையும்.
சோயாபீன் எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பால் உள்ளூர் விலை குறையலாம். கோழி, பால், மீன் வளர்ப்போருக்கு நன்மை, ஆனால் விவசாயிகளுக்கு வருமானம் குறையும் அபாயம் உள்ளது.
ஏன் பால் மற்றும் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை தடுத்தது?
இந்தியா மரபணு மாற்றப்பட்ட சோயாபீன், மரபணு மாற்றப்பட்ட சோளம், அமெரிக்க பால் பொருட்களை அனுமதிக்கவில்லை. உணவு பாதுகாப்பு, கலாச்சார காரணங்கள் இதற்கு காரணம். ஒப்பந்தத்தில் "அமெரிக்க உணவு மற்றும் விவசாய வர்த்தகத்தில் நீண்டகால அல்லாத வரி தடைகளை" இந்தியா ஆராயும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது எதிர்காலத்தில் மரபணு மாற்றப்பட்ட விதிகள் தளர்த்தப்படுமா என்ற கேள்வியை எழுப்புகிறது.
இதேபோல் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்க இறக்குமதிக்கு அனுமதிக்கப்பட்ட சில கூடுதல் பொருட்கள் என சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த லிஸ்டில் இருக்கும் பொருட்கள் என்ன..? என்பது அடுத்த முக்கிய கேள்வியாக உள்ளது.
அமெரிக்கா - இந்தியா மத்தியிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா முக்கிய விவசாய பொருட்களை பாதுகாத்துள்ளது, ஆனால் கால்நடை தீவனம் போன்றவற்றுக்கு சந்தை திறந்துள்ளது. இது கால்நடை துறைக்கு நன்மையாக இருந்தாலும், சோயாபீன் விவசாயிகளுக்கு சவாலாக மாறியுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?



Click it and Unblock the Notifications