டெல்லி: டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்ற உடனே இந்தியா சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகபட்ச இறக்குமதி வரியை விதித்தார். இது உலக பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது விதிக்கப்பட்ட இறக்குமதி வரியை ஜூலை 9ஆம் தேதி வரை தள்ளி வைப்பதாக அறிவிப்பு வெளியிட்டார். அதற்குள் இந்தியா தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வர்த்தக ஒப்பந்தத்தை முடித்து கொள்ள வேண்டும் என கூறி இருந்தார். இந்த நிலையில் அவர் விதித்த கெடு முடிய இன்னும் 8 நாட்களே இருக்கின்றன. இதற்கிடையே அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது தொடர்பான பலகட்ட பேச்சு வார்த்தைகள் நடந்து முடிந்திருக்கின்றன .

டெல்லியிலும், அமெரிக்காவிலும் இரு நாட்டு அதிகாரிகளும் அமைச்சர்களும் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி முதலில் ஒரு மினி வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வோம் என்ற முடிவுக்கு வந்தனர். இந்த முதல் கட்ட ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பணிகள் தான் தற்போது நடக்கின்றன. டிரம்ப் விதித்த கெடு ஜூலை 9ஆம் தேதி முடிவடைவதால் அதற்குள் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே ஒரு முதல் கட்ட ஒப்பந்தத்தை ஏற்படுத்துவிட வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது.
தற்போது வர்த்தகத் துறை அமைச்சகத்தின் சிறப்பு செயலாளரான ராஜேஷ் அகர்வால் தலைமையிலான குழு அமெரிக்காவுக்கு சென்ற அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஜூன் 30ஆம் தேதி வரை அவர்கள் அங்கேயே தங்கியிருந்து பேச்சு வார்த்தையை நடத்தி முடித்து இருக்கின்றனர். இந்த பேச்சுவார்த்தையில் முக்கியமான மூன்று விஷயங்களில் தான் இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன .
அமெரிக்கா தங்கள் நாட்டு வேளாண் பொருட்கள்,பால் பொருட்கள் மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு இந்திய சந்தையில் அனுமதி தர வேண்டும் என கேட்பதாகவும் இந்த விஷயத்தில் இந்தியா இன்னும் ஒப்புதல் தெரிவிக்காமல் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை அமெரிக்கா தொடர்ந்து இந்த விஷயத்தில் மிக அழுத்தம் கொடுத்தால் ஒப்பந்தம் தள்ளி போவதற்கான வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
அமெரிக்காவின் வேளாண் பொருட்கள் மற்றும் பால் பொருட்களை இந்திய சந்தைக்குள் நுழைவதை மத்திய அரசு விரும்பவில்லை என்றும் இது தொடர்பாகத்தான் முக்கியமான பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்றும் அதிகாரிகள் மணி கண்ட்ரோல் தளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளனர். ஒருவேளை ஜூலை 9ஆம் தேதிக்குள் இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த மினி வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்றால் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 26 சதவீதம் இறக்குமதி வரியை விதிக்கும்.
இதற்கிடையே வெள்ளை மாளிகையை செய்தி தொடர்பாளர் கரோலின் அளித்த பேட்டியில் இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும், அமெரிக்க வர்த்தக துறை அமைச்சர் இது தொடர்பாக அதிபர் டிரம்பை சந்தித்து பேசியுள்ளார் என தெரிவித்திருந்தார். தற்போது மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் குவாட் நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு பயணம் செய்திருக்கிறார்.இந்த பயணத்தின் ஒரு பகுதியாக ஜெய்சங்கர் அந்நாட்டு ஊடகத்திற்கு அளித்த இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் சிக்கலான ஒன்று அதற்கான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் இருக்கிறது என கூறியுள்ளார்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?



Click it and Unblock the Notifications