உண்மையை உடைத்த அமைச்சர் Piyush Goyal.. அமெரிக்க ஒப்பந்தத்தில் என்ன நடக்குது..?!

இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கு மிகவும் முக்கியதுவம் வாய்ந்த விவசாய பொருட்கள் மற்றும் பால் துறை பொருட்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன என்று மத்திய வணிக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 2ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பால் அறிவிக்கப்பட்ட இந்த ஒப்பந்தம் இந்திய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரியை 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கிறது. அமெரிக்க பொருட்களுக்கு இந்தியாவில் வரி பூஜ்ஜியமாக குறையும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

உண்மையை உடைத்த அமைச்சர் Piyush Goyal.. அமெரிக்க ஒப்பந்தத்தில் என்ன நடக்குது..?!

ஆனால் காலையில் விவசாய பொருட்கள் மற்றும் பால் துறை பொருட்கள் துறையில் அமெரிக்க நிறுவனங்கள் அதிகளவில் ஆதிக்கம் செய்து இந்திய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் எதிர்கட்சியினர் இந்த ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்த நிலையில் இன்று மாலை 5.15 மணிக்கு மத்திய வணிக அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்தார்.

பியூஷ் கோயல் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் விவசாயிகள் மற்றும் பால் துறையினரின் நலன்களை கவனத்தில் கொண்டுள்ளார் என்றார். "நாங்கள் விவசாயிகள் மற்றும் பால் துறையினரின் நலன்களை ஒருபோதும் சமரசம் செய்ததில்லை. நாட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கியதுவம் வாய்ந்த விவசாய பொருட்கள் மற்றும் பால் துறை அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன" என்று அவர் விளக்கம் கொடுத்தார்.

இந்தியாவின் பாரம்பரிய வர்த்தக நிலைப்பாட்டை அமெரிக்கா உடனும் பின்பற்ற உள்ளது தற்போது தெளிவாகியுள்ளது. இங்கிலாந்து, நியூசிலாந்து, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகளுடனான சமீபத்திய வர்த்தக ஒப்பந்தங்களிலும் முக்கிய விவசாய பொருட்கள் மற்றும் பால் துறை விலக்கப்பட்டன.

ஆனால் அமெரிக்க வேளாண்மை துறை செயலர் ப்ரூக் ரோலின்ஸ் இதுக்குறித்து முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்பினார். இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், ப்ரூக் ரோலின்ஸ் இந்த ஒப்பந்தம் அமெரிக்க விவசாய பொருட்களை இந்தியாவின் பெரும் சந்தைக்கு ஏற்றுமதி செய்ய உதவும் என்று கூறியுள்ளார். இது அமெரிக்க கிராம பகுதிகளுக்கு பெரும் பணப்புழக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் இந்தியாவின் வளரும் மக்கள் தொகை அமெரிக்க விவசாய பொருட்களுக்கு முக்கிய சந்தையாக உள்ளது என்று ரோலின்ஸ் தெரிவித்தார். இவர் செய்த டிவீட்டை வெள்ளை மாளிகை டிவிட்டர் கணக்கும் ரீடிவீட் செய்துள்ளது.

உண்மையை உடைத்த அமைச்சர் Piyush Goyal.. அமெரிக்க ஒப்பந்தத்தில் என்ன நடக்குது..?!

இந்த நிலையில் இக்குழப்பத்திற்கு மத்திய வணிக அமைச்சர் பியூஷ் கோயல் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இரு நாட்டு பேச்சுவார்த்தை குழுக்களும் தற்போது ஒப்பந்த ஆவணங்களை இறுதி செய்து வருகின்றன. இது பிப்ரவரி 2025இல் தொடங்கிய முழு அளவிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் (BTA) முதல் கட்டமா அல்லது முழு ஒப்பந்தமா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

இறுதியாக பியூஷ் கோயல் பேசுகையில் இரு தரப்பும் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி, அனைத்து விதிகளும் உறுதி செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக கூட்டு அறிக்கை வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கினாலும், விவசாயம் மற்றும் பால் துறை பாதுகாக்கப்படுவதால் உள்ளூர் விவசாயிகளின் நலன்கள் பாதுகாப்பாக உள்ளன. அமெரிக்க பொருட்கள் மலிவாவதால் உணவு பணவீக்கம் குறையலாம். ஒப்பந்த விவரங்கள் வெளியாகும் போது மேலும் தெளிவு கிடைக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+