இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து பல மாதங்களாக இரு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி இன்று முடிவுக்கு வந்துள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்து ஆரம்பக்கட்டத்தில் பேசப்பட்ட போது அமெரிக்க அரசு இந்திய விவசாய மற்றும் பால்வளத்துறையில் முழு சுதந்திரம் வேண்டும் என கோரிக்கை வைத்தது. இது இந்தியாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது மறக்க முடியாது.
இப்படியிருக்கையில் நேற்று நள்ளிரவில் மோடி மற்றும் டிரம்ப் மத்தியிலான பேச்சுவார்த்தக்கை பின்பு டிரம்ப் இந்தியா மீதான வரியை 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்க உள்ளதாக தெரிவித்தார். இதேபோல் இந்தியா அமெரிக்க பொருட்களுக்கு ஜீரோ வரி விதிப்பதாகவும், பல்வேறு வர்த்தக கட்டுப்பாடுகளை படிப்படியாக குறைக்கப்படும் என தெரிவித்தார். இதில் விவசாய துறையும், பால்வள துறையும் அடங்குமா என்பதை டிரம்ப் அறிவிக்கவில்லை. ஆனால் அமெரிக்க வேளாண்மை துறை செயலர் ப்ரூக் ரோலின்ஸ் இதுக்குறித்து முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.

இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், ப்ரூக் ரோலின்ஸ் இந்த ஒப்பந்தம் அமெரிக்க விவசாய பொருட்களை இந்தியாவின் பெரும் சந்தைக்கு ஏற்றுமதி செய்ய உதவும் என்று கூறியுள்ளார். இது அமெரிக்க கிராம பகுதிகளுக்கு பெரும் பணப்புழக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
2024இல் இந்தியாவுடனான அமெரிக்க விவசாய வர்த்தக பற்றாக்குறை 1.3 பில்லியன் டாலராகும். இந்தியாவின் வளரும் மக்கள் தொகை அமெரிக்க விவசாய பொருட்களுக்கு முக்கிய சந்தையாக உள்ளது என்று ரோலின்ஸ் விளக்கியுள்ளார்.
2025இல் அமெரிக்காவின் இந்தியா ஏற்றுமதி சுமார் 1.7 பில்லியன் டாலர் அளவில் இருந்தது. இதில் பாதாம், பிஸ்தா போன்ற உலர் பழங்கள், பருத்தி, சோயாபீன் எண்ணெய் ஆகியவை முக்கிய இடம் வகித்தன. இந்த ஒப்பந்தம் இந்த ஏற்றுமதியை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அமெரிக்காவில் விளைபொருட்கள் மட்டும் அல்லாமல் விவாசய உபகரணங்கள், இயந்திரங்கள் ஆகியவையும் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் என கணிக்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்துக்கு இந்திய காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனம் தெரிவித்துள்ளது. மேலும் ஒப்பந்தம் குறித்து முழு விவரங்களை வெளியிட வேண்டும் என்று கோரியுள்ளது. டிரம்ப் அறிவித்த வகையில் இந்தியா அமெரிக்க பொருட்களுக்கு வரி மற்றும் வரி அல்லாத தடைகளை பூஜ்ஜியத்துக்கு குறைப்பது இந்திய தொழில்கள், வர்த்தகர்கள், விவசாயிகளை பாதிக்கும் என்று கூறியுள்ளது. விவசாய துறையை திறப்பது விவசாயிகளின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த ஒப்பந்தம் மோடி கோரிக்கையின் பேரில் ஏற்பட்டதாக டிரம்ப் அறிவித்துள்ளது. காங்கிரஸ் இதை விமர்சித்து X தளத்தில் பதிவிட்டுள்ளது. இந்திய சந்தை முழுவதும் அமெரிக்காவுக்கு திறக்கப்படுவது உள்நாட்டு பொருளாதாரத்தை பாதிக்கும் என்று அச்சம் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு மத்தியில் ஒப்புத்தல் ஏற்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பால் அறிவித்தார். கடந்த ஆகஸ்ட் 2025இல் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்த அமெரிக்கா, அதில் 25 சதவீதம் ரஷ்ய எண்ணெய் வாங்கியதால் தொடர்புடையதாக இருந்தது. இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் வாங்குதல் உக்ரைன் போரை நிதியளிக்க உதவுகிறது என்று அமெரிக்க அதிகாரிகள் குற்றம்சாட்டினர். இப்போது இந்த ஒப்பந்தம் வரிகளை குறைத்து, இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க விவசாய பொருட்கள் அதிகம் இறக்குமதி ஆகும் போது உணவு விலை குறையலாம். ஆனால் உள்நாட்டு விவசாயிகளுக்கு போட்டி அதிகரித்து அவர்களின் வருமானம் குறையும். வர்த்தக ஒப்பந்தம் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு நன்மை அளிக்கும் என்றாலும், காங்கிரஸ் சுட்டிக்காட்டியபடி விவசாய துறை திறப்பு விவசாயிகளின் வருமானத்தை பாதிக்கலாம். முழு விவரங்கள் வெளியாகும் போது தெளிவு கிடைக்கும்.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

ஈரானுக்கு 48 மணி நேர கெடு விதித்த டிரம்ப்..!! பதிலுக்கு வஜ்ராயுதத்தை கையில் எடுத்த ஈரான்..!!

யாருடைய கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி? அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லும் புது கணக்கு

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!



Click it and Unblock the Notifications