இந்தியா-வை ஆகஸ்ட் 1 என்ற டென்லைன் துரத்திக்கொண்டு இருக்கும் வேளையில், அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட டொனால்டு டிரம்ப் அரசு இந்தியாவின் பால்வளத்துறை மற்றும் விவசாய துறையில் அமெரிக்க நிறுவனங்களையும், அமெரிக்க முதலீடுகளையும் அனுமதிக்க கட்டாயப்படுத்துகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று இந்தியா பால்வளத்துறை மற்றும் விவசாய துறையில் அமெரிக்க முதலீடுகளை அனுமதித்தால் எந்த அளவுக்கு இந்தியா இழப்பை எதிர்கொள்ளும் என்று ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே முழு வர்த்தக ஒப்பந்தத்தை கையெழுத்திட முடியாது என்ற நிலையில், ஆகஸ்ட் 1 டெட்லைனில் இருந்து தப்பிக்க இடைக்கால ஒப்பந்தத்தை இரு நாடுகளும் இறுதி செய்யும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், பால் மற்றும் விவசாய துறைகள் முக்கிய பிரச்சினைகளாக உள்ளன.
இந்தியா அரசு பால் மற்றும் விவசாய துறைகளை அமெரிக்காவிற்கு திறப்பதில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில், அமெரிக்காவுக்கு கதவுகளை திறந்தால் எப்படியெல்லாம் இந்தியா பாதிக்கப்படும் என்பதை பார்ப்போம்.
இந்தியாவின் பால் வள துறை (Dairy), நாட்டின் மொத்த மதிப்பு சேர்க்கை (GVA)யில் சுமார் 2.5-3% பங்கு வகிக்கிறது, இதன் மதிப்பு என்று பார்த்தால் சுமார் 7.5 - 9 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது. இந்த துறையில் மட்டும் சுமார் 8 கோடி நபர்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்புகளை கொடுத்து, அவர்களுக்கு தனிசரி வருமானத்தை அளிக்கிறது.
குறிப்பாக பால் வளத்துறை கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக செயல்படுகிறது, இதனால் இத்துறையில் இந்தியா எந்தொரு வெளிநாட்டையும் அனுமதிக்காமல் தன்னிறைவாக இருப்பது முக்கியமானதாக உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இந்தியாவில் அமெரிக்காவின் பால் இறக்குமதியை அனுமதிப்பது இந்த துறையை பெரிதும் பாதிக்கும்.
இந்த நிலையில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வெளியிட்ட ஒரு சமீபத்திய ஆய்வறிக்கையில், இந்திய பால் வளத்துறையில் அமெரிக்க இறக்குமதியை அனுமதித்தால், இத்துறையில் இருக்கும் மக்கள் ஆண்டுக்கு ரூ.1.03 லட்சம் கோடி இழப்பை சந்திக்கலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த ஆய்வறிக்கையில், அமெரிக்க பால் வள துறை பெரிய அளவிலான மானியங்களை பெறுவதால், மிகவும் மலிவான விலையில் தனது தயாரிப்புகளை இந்தியாவில் இறக்குமதி செய்யும். அப்படி செய்யப்பட்டால் இந்தியாவில் உள்ள சிறு குறு பால் விவசாயிகளின் வருமானம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது எனவும் SBI அறிக்கையின் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த அறிக்கையில், இந்திய பால் வளத் துறையை அமெரிக்காவுக்கு திறக்கப்பட்டால் இந்தியாவில் பால் விலை குறைந்தபட்சம் 15% குறையலாம், இதனால் ஆண்டுக்கு சுமார் ரூ.1.03 லட்சம் கோடி அளவிலான இழப்பை இத்துறையை நம்பியிருக்கும் மக்கள் எதிர்கொள்வார்கள் என புள்ளிவிபரங்களை அடுக்கியுள்ளது.
மேலும், SBI அறிக்கை இந்தியா அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று பால் இறக்குமதியை அனுமதித்தால், ஆண்டுக்கு சுமார் 25 மில்லியன் டன் பால் மற்றும் பால் பொருட்கள் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படாலம் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இது சிறு விவசாயிகளின் உற்பத்தியை பாதித்து, அவர்களது வாழ்வாதாரத்தை அபாத்தான நிலைக்கு தள்ளும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications