இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படுகிறதா? மார்கோ ரூபியோ இந்தியா வருகை..!!

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இன்று இந்தியா வருகிறார். இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது உஸ்பெகிஸ்தானில் உள்ள ரூபியோ, அங்கிருந்து இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நகருக்குப் பயணம் மேற்கொள்கிறார். ஜாம்நகரில் தன்னுடைய பயணத்தை முடித்து கொண்டு பிற்பகல் 2:15 மணிக்கு மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு ரூபியோ வந்தடைகிறார். பிற்பகல் 3:40 மணிக்கு, வரலாற்று சிறப்புமிக்க தாஜ் பேலஸ் ஹோட்டலில் உள்ள தாஜ் நினைவு சின்னத்தில் மலர்வளையம் வைத்து பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.

இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படுகிறதா? மார்கோ ரூபியோ இந்தியா வருகை..!!

பிற்பகல் 3:50 மணிக்கு அதே ஹோட்டலில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசுகிறார். அப்போது இந்தியா-அமெரிக்க இடையிலான உறவு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய நிலைத்தன்மை குறித்து விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து ஜியோ உலக மாநாட்டு மையத்தில் மாலை 6:35 மணிக்கு நடைபெறும் "ஃப்ரீடம் 250" நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சி இரு நாடுகளுக்கும் இடையேயான இராஜாங்க உறவுகளை கொண்டாடும் விதமாக அமைகிறது.

Also Read

நாளை காலை 10:30 மணிக்கு மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு குஜராத் மாநிலம் ஜாம்நகருக்கு செல்கிறார். முன்னதாக உஸ்பெகிஸ்தானில் செய்தியாளர்களிடம் பேசிய மார்கோ ரூபியோ, அமெரிக்காவும் இந்தியாவும் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக கூறினார். ஒன்றரை ஆண்டுகளாக இந்தியா அமெரிக்க இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் முதல் கட்ட ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகும் என்ற எதிர்பார்ப்பு நீடிக்கும் நிலையில் நம்பிக்கை தரும் தகவலை இவர் வெளியிட்டுள்ளார்.

மேலும், உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் எரிபொருள் விலையின் தாக்கங்கள் காரணமாக சில தடைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் அமெரிக்காவிற்கு ஏற்பட்டதாக சுட்டிக்காட்டினார். கடந்த சில மாதங்களாக உலகளாவிய எரிபொருள் விநியோகம் மற்றும் விலைகள் மீதான தாக்கம் காரணமாக நாங்கள் சில தடைகளை தளர்த்த வேண்டியிருந்தது. இந்த விவகாரங்கள் அனைத்தையும் நாங்கள் கவனமாக கையாள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Recommended For You

இந்தியா போன்ற நாடுகளின் எரிசக்தி தேவைகள், போர் சூழல்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றுக்கு மதிப்பளிக்கும் வகையில்தான் ரஷ்யா மீதான தடைகளில் அமெரிக்கா தளர்வுகளை பரிசீலித்துள்ளதாக ரூபியோ சுட்டிக்காட்டினார். முன்னதாக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க கூடாது என அழுத்தம் தந்து வந்த அமெரிக்கா தற்போது அந்நாட்டின் தேவைக்கே ரஷ்யாவிடம் இருந்து டீசலை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த சூழலில் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கினால் 100% இறக்குமதி வரி விதிக்கும் சட்டத்தில் தளர்வினை அறிவித்துள்ளது. இதனால் இந்தியா எந்த இடையூறும் இல்லாமல் , வரி அச்சங்கள் இல்லாமல் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க முடியும். இதனை சுட்டிக்காட்டியே ரூபியோ இவ்வாறு கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+