இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை மீண்டும் வேகமெடுத்துள்ளது. டெல்லியில் இன்று இரு தரப்பு குழுவினரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த பேச்சு வார்த்தையில் ஒரு இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பாக முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதரான ஜியோ கார் கடந்த வாரம் இந்தியா தன்னுடைய குழுவை அமெரிக்காவிற்கு அனுப்பியது இந்த வாரத்தில் அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை குழுவினர் இந்தியா வருகின்றனர். அடுத்த சில வாரங்களில் இந்தியாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே முதல் கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து ஆகிவிடும் என நம்பிக்கை தெரிவித்து இருந்தார். அந்த வகையில் இன்று டெல்லியில் அமெரிக்க மற்றும் இந்திய வர்த்தக குழு வர்த்தக பேச்சுவார்த்தை குழுவினர் முக்கியமான ஆலோசனை நடத்த உள்ளனர் .நான்கு நாட்களுக்கு இந்த ஆலோசனை நடைபெற இருக்கிறது.

கடந்த ஆண்டு அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப் இந்தியா, சீனா உட்பட பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கு அதிகபட்ச வரியை விதித்தார். குறிப்பாக இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணமாக கூறி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதித்தார். இதனால் இந்தியாவை சேர்ந்த குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த ஜவுளி ஏற்றுமதியாளர்கள் , தோல் பொருட்கள் ஏற்றுமதியாளர்கள் உட்பட ஏராளமானவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்த சூழலில் தான் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. இந்த பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக முதல் கட்டமாக இருதரப்புக்கும் ஒரு இடைக்கால தற்காலிக வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்றும் இதனை அடுத்து நிரந்தரமான வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்றும் இரு நாடுகளும் அறிவித்தன. பல மாதங்களாக அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்ற வருகிறது.
அமெரிக்கா தங்கள் நாட்டு வேளாண் பொருட்களை இந்திய சந்தையில் அனுமதிக்க வேண்டும் என கூறி வருகிறது. அதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்து வருகிறது. குறிப்பிட்ட சில விஷயங்களில் இது தரப்புக்கும் உடன்பாடு ஏற்படாமல் இருப்பதால் தற்காலிக வர்த்தக ஒப்பந்தம் என்பது தொடர்ந்து தள்ளி போன வண்ணம் இருக்கிறது. ஆனால் தற்போது அது மீண்டும் வேகம் எடுத்து இருக்கிறது.
கடந்த வாரம் தான் மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் அமெரிக்காவிற்கு சென்றிருந்தார். அங்கே பல்வேறு துறை சார்ந்த ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிலையில் அமெரிக்க குழுவினர் இந்த வாரம் இந்தியா வருகை தந்துள்ளனர். கூடிய விரைவில் இந்தியாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே தற்காலிக வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் பட்சத்தில் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதிக்கக்கூடிய வரி விதிப்பு என்பது பெருமளவில் குறையும். இது இந்தியாவை சேர்ந்த ஜவுளி உட்பட பல்வேறு துறை சார்ந்த ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். அது மட்டும் இல்லாமல் பல்வேறு துறை சார்ந்த இந்திய தொழில்களுக்கு அமெரிக்காவில் தொழில் புரியும் சந்தை வாய்ப்பு என்பது பெரும். அதே போல அமெரிக்க நிறுவனங்கள் தங்களுடைய பொருட்களை இந்தியாவில் நேரடியாக விற்பனை செய்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் உறுதியாகும் பட்சத்தில் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம் அடைவதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பினை ஏற்படுத்தி தரும்.


Click it and Unblock the Notifications

