சீனா-வின் அபரிமிதமான வளர்ச்சியின் மூலம் பெற்ற அதிகப்படியான வளர்ச்சியும், வருமானத்தையும் தனது வர்த்தகம், அதிகாரத்தை விரிவாக்கம் செய்ய கடன் வலை, பெல்ட் ரோடு இன்ஷியேடிவ் போன்ற திட்டங்கள் மூலம் சாதித்து வந்தது. கடந்த 15 வருடத்தில் சீன அரசின் ஆதிக்கம் ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு நாடுகளில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.
சீனாவின் வர்த்தக ஆதிக்கத்தை தடுக்கும் விதமாக அமெரிக்கா தலைமையிலான அதன் நட்பு நாடுகள் கொரோனா தொற்று காலத்தில் இருந்தே பல்வேறு பணிகளை செய்து வருகிறது. இந்த நிலையில் இந்த முயற்சியில் முக்கிய கட்டமாக ஐரோப்பா, வளைகுடா நாடுகள், இந்தியா ஆகிய முக்கிய நாடுகளை இணைக்கும் பொருட்டு புதிய திட்டம் தீட்டப்பட்டு உள்ளது.

அமெரிக்கா, சவூதி அரேபியா, இந்தியா மற்றும் பிற நாடுகள் இணைந்து வளைகுடா நாடுகள் மற்றும் தெற்காசியா நாடுகள் இடையே வர்த்தகம் மற்றும் வர்த்தக பாதையை மறுசீரமைக்கக்கூடிய சாத்தியமான உள்கட்டமைப்பு ஒப்பந்தத்தை ஆலோசனை செய்து வருகின்றனர்.
இந்த திட்டத்தின் கீழ் மத்திய கிழக்கு நாடுகளை இரயில்வே மற்றும் துறைமுகம் மூலம் இந்தியாவுடன் இணைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இது அமெரிக்கா தலைமையிலான அதன் நட்பு நாடுகளின் துணையுடன் நடத்த உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
டெல்லியில் இன்று துவங்கியுள்ள ஜி20 தலைவர்களின் கூட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஐரோப்பாவை உள்ளடக்கிய பேச்சுக்கள் இருக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஒருபுறம் ஜி20 கூட்டத்தில் இதுகுறித்த ஆலோசனையில் சரியான முடிவைக் எடுக்க கூடும் என நம்பப்படும் வேளையில், மறுபுறம் முடிவுகளை எடுக்காமல் போகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்ததாக தி கார்டியன் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளை இரயில்வே மற்றும் துறைமுகம் மூலம் இந்தியாவுடன் இணைக்கும் திட்டம் குறித்த ஆலோசனைகள் பல மாதங்களாக நடந்து வருகின்றன, இதை எப்படியாது சத்தியப்படுத்த வேண்டும் என்பதில் அமெரிக்கா தீவிரமாக உள்ளன என்று அதிகாரிகளில் ஒருவர் கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டிற்கு ஜோ பைடன் வந்துள்ள நிலையில், இன்று நாளையும் நடக்கும் சிறப்பு சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வாய்ப்புள்ளது. மேலும் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடனும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளது.
சீனாவுக்கு மாற்றாக ஒரு உற்பத்தி நாடுகளையும், அதற்கான தளத்தையும் ஜி20 நாடுகளுக்குள் உருவாக்க வேண்டும் என்ற திட்டத்துடனும், சீனாவின் Belt and Road global infrastructure திட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு இத்திட்டத்தை முன் வைக்கிறது.
சீனா தனது Belt and Road திட்டத்தின் வாயிலாக உலக நாடுகளுக்கு இதுவரையில் 240 பில்லியன் டாலர் அளவிலான தொகையை செலவு செய்துள்ளது. 240 பில்லியன் டாலர் என்பது கிட்டத்தட்ட 20 லட்சம் கோடி ரூபாயாகும். இதேவேளையில் டெல்லியில் நடக்கும் ஜி20 கூட்டத்திற்கு சீன அதிபர் வராதது தற்போது முக்கியமான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications