இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே கொரோனாவுடன் சேர்ந்து இயற்கையும் மக்களை வாட்டி வதைத்து வருகின்றது. ஆங்காங்கே வெள்ளம், புயல் மழை, வறட்சி என மக்களை வதைத்து வருகின்றது.
தண்ணீர் இல்லாமல் விவசாயம் பாதித்த நாட்கள் போய், தற்போது அதிகளவிலான வெள்ளத்தில் பயிர்கள் மூழ்கி அழுகி பாழடைந்துள்ளன. பருவம் தவறி பெய்த மழையால் விவசாயம் உற்பத்தி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இது ஏற்கனவே நெருக்கடியில் இருக்கும் மக்களை, இன்னும் நெருக்கடிக்கு தள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலைவாசி விகிதம்
தற்போது விலைவாசி விகிதம் மக்களை பாடாய்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் பருவகால மாற்றம் என்பது மேலும் விவசாய உற்பத்தியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதனால் பற்றாக்குறை நிலவலாம். இதன் காரணமாக விலைவாசி அதிகரிக்கலாம். இதன் மூலம் பணவீக்கம் இன்னும் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பருவமழை பற்றாக்குறை
இதனால் பொருளாதார வளர்ச்சி விகிதமான இன்னும் சரிவுக்கு தள்ளப்படலாம் என பார்க்லேஸ் நிறுவனத்தின் இந்தியா தலைமை பொருளாதார நிபுணர் எச்சரித்துள்ளார்.
நாடு 8% பருவமழை பற்றாக்குறையை எதிர்கொளண்டுள்ளது. இது எதிர்காலத்தில் மீண்டும் விதைப்பு மற்றும் அறுவடை பருவங்களை பாதிக்கும். மொத்ததில் விலைவாசியினை ஊக்குவிக்கலாம்.
பணவீக்கம் அதிகரிக்கலாம்
இது மேற்கோண்டு பணவீக்கத்திற்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நடுத்தர காலத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதனை சரி செய்ய அரசு கிராமப்புற வருவாயினை ஊக்கவிக்க சிந்திக்க வேண்டும். இது விவசாயத்தினை ஊக்குவிக்கும் வகையில் இருக்க வேண்டும்.
பணவீக்க இலக்கினை விட அதிகரிப்பு
ரிசர்வ் வங்கியின் பணவீக்க இழப்பானது 2 - 6% வரையில் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்த இலக்கு உடைக்கப்பட்டது.
எனினும் கொரோனாவினால் சரிந்துள்ள பொருளாதாரத்தினை மீட்க, மத்திய வங்கியானது நீண்ட காலமாக தனது வட்டி விகிதத்தினை மாற்றாமல் உள்ளது. இதற்கிடையில் மார்ச் 2022 வரையிலான ஆண்டில் பணவீக்க விகிதம் 5.7% ஆக இருக்கலாம் என மத்திய வங்கி எதிர்பார்க்கிறது.
அரசு நடவடிக்கை எடுக்கணும்
நாட்டில் மழையின் பற்றாக்குறையினால் அதிகரிக்கும் விலைவாசியை கட்டுப்படுத்த, பற்றாக்குறையை தடுக்க அரசு ரேஷன் மற்றும் ஊக்கத் தொகைகள் இன்னும் கூடுதலாக கொடுக்க வேண்டியிருக்கும். அப்படியில்லாவிட்டால் தேவை சரியலாம். இதனால் பொருளாதாரம் சரிவினை நோக்கி செல்லலாம்.
விலைவாசி அதிகரிக்கலாம்
உதாரணத்திற்கு பருத்தி அறுவடை என்பது குறைவாக இருந்தால் ஆடைகளின் விலைவாசி அதிகரிக்கும். வெங்காயம் அறுவடை குறைந்தால், அதன் விலை மேலும் அதிகரிக்கலாம். இப்படி ஒவ்வொரு அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும்போது, பணவீக்கம் மோசமான நிலையை எட்டலாம். மொத்தத்தில் இது சாமானிய மக்களை பாதிக்கலாம்.
ரிசர்வ் வங்கியின் கண்ணோட்டம்
ரிசர்வ் வங்கி வளர்ச்சி கண்ணோட்டத்தில் வட்டி விகிதத்தினை மாற்றாமல் வைத்துள்ளது. ஆனால் பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்கவும், இயல்பு நிலைக்கு கொண்டு வரவும் இது மட்டும் போதாது. ஏனெனில் தற்போது வரையில் ஒரு நிச்சயமற்ற நிலையே இருந்து வருகின்றது. ஆக முதலில் இதனை சரிசெய்ய வேண்டும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
வறுமை நிலைக்கு தள்ளலாம்
கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே பணவீக்கம் என்பது அதிகரித்து காணப்படும் இந்த நேரத்தில், இதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் இது மேலும் பொருளாதார சரிவுக்கு வழிவகுக்கலாம். இது மக்களை இன்னும் வறுமை நிலைக்கு தள்ளலாம். இது சாமனிய மக்களின் வாழ்வாதரத்தினை பாதிக்கலாம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications