லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான ப்ளூ டார்ட் இந்தியாவில் அதன் பிரீமியம் சேவைகளில் ஒன்றான டார்ட் ப்ளஸ் சேவையின் பெயரை பாரத் டார்ட் என பெயர் மாற்றப்பட்டு உள்ளது.
இந்தியாவின் பெயரை மோடி தலைமையிலான அரசு பாரத் என சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பெயர் மாற்றம் செய்வதாக கூறப்படும் வேளையில் ஜி20 கூட்டத்தில் இருந்து பல இடத்தில் அரசு ஆவணங்களில் பாரத் என பெயர் இடம்பெற்று வருகிறது.

இது மக்கள் மத்தியில் மத்தியிலும், அரசியல் கட்சிகள் மத்தியிலும் பெரும் விவாதமாக மாறியிருக்கும் வேளையில் எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடாத நிலையில் ப்ளூடார்ட் நிறுவனம் தனது சிறப்பு தேவையின் பெயரை டார்ட் ப்ளஸ் என்பதில் இருந்து பாரத் டார்ட் என மாற்றியுள்ளது.
புளூ டார்ட்டின் நிர்வாக இயக்குநர் பால்ஃபோர் மானுவல் கூறுகையில், இந்தியா முழுவதும் நாங்கள் தொடர்ந்து சேவை செய்வதால், இந்த பெயர் மாற்றம் எங்களுக்கு ஒரு அற்புதமான வர்த்தக மாற்றத்தை அளிக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.
மேலும் Blue Dart Express Limited நிறுவனம் பாரதத்தை உலகத்துடனும், உலகத்தை பாரதத்துடனும் இணைக்கும் முக்கிய பணியில் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைந்து பணியாற்றி மாற்றப்பட்ட பயணத்திற்கு அடித்தளமிட அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டு உள்ளது.
புளூ டார்ட்டின் நிர்வாக இயக்குநர் பால்ஃபோர் மானுவல் கூறுகையில், இந்தியா முழுவதும் நாங்கள் தொடர்ந்து சேவை செய்வதால், இந்த பெயர் மாற்றம் எங்களுக்கு ஒரு அற்புதமான வர்த்த மாற்றத்தை அளிக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications