நாம் செலுத்தக்கூடிய வருமான வரி தொகையானது அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாட்டிற்கும் இந்த வருமான வரி விகிதம் மாறுபடுகின்றன.
உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் வருமான வரி விகிதங்கள் என்ன? ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் ஊதியம் பெறக்கூடிய ஒரு நபர் இந்தியாவில் எவ்வளவு வரி செலுத்த வேண்டும், அமெரிக்காவில் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பது குறித்த ஒப்பீட்டினை இந்த கட்டுரையில் நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் தற்போது வருமான வரியை தாக்கல் செய்வதற்கு இரண்டு நடைமுறைகள் இருக்கின்றன. ஒன்று பழைய வரி நடைமுறை, மற்றொன்று புதிய வரி நடைமுறை. பழைய வரி நடைமுறையில் நமது வருமான வரியை குறைப்பதற்காக பிரிவு 80c இன் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரையிலான முதலீடுகளை கணக்கு காட்டலாம், அதேபோல நிலையான கழிவு என ஒரு 50,000 ரூபாய் கழிக்கப்படுகிறது.
பழைய வரி நடைமுறை:
ஆண்டு வருமானம் = ரூ.15,00,000
ரூ. 12,500 (ரூ.2.5 லட்சத்தில் 5%) + ரூ. 1,00,000 (ரூ.5 லட்சத்தில் 20% ) + ரூ. 1,50,000 (ரூ.5 லட்சத்தில் 30% ). எனவே செலுத்த வேண்டிய வருமான வரி ரூ. 2,62,500.
அதுவே புதிய வரி நடைமுறையில் பார்க்கும்போது ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் சம்பாதிக்கக்கூடிய ஒரு நபருக்கான வரி விகிதம் இதுபோல் இல்லை.
புதிய வரி நடைமுறை:
ஆண்டு வருமானம் = ரூ.15,00,000
ரூ. 12,500 (ரூ. 2.5 லட்சத்தில் 5% ) + ரூ. 25,000 (ரூ. 2.5 லட்சத்தில் 10%) + ரூ. 37,500 ( ரூ. 2.5 லட்சத்தில் 15% ) + ரூ. 50,000 (ரூ. 2.5 லட்சத்தில் 20%) + ரூ. 62,500 ( ரூ. 2.5 லட்சத்தில் 25%). எனவே செலுத்த வேண்டிய வருமான வரி ரூ. 1,87,500.
இதுவே அமெரிக்காவில் ஒரு நபர் ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார் என வைத்துக் கொள்ளலாம். 15 லட்சம் ரூபாயை அமெரிக்க டாலர் மதிப்பில் குறிப்பிடும் போது, 18,500 அமெரிக்க டாலர்கள் ஆகும்.
வரி கணக்கீடு: USD 1,160 (USD 11,600இல் 10 %) + USD 828 (USD 6,900இல் 12%).
எனவே செலுத்த வேண்டி வரி USD 1,988 ஆகும். இதனை இந்திய ரூபாயில் மாற்றினால், ரூ. 1,66,191 .
இந்தியா மற்றும் அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது வரி விகிதங்கள் அடிப்படையில் பார்த்தால் இந்தியாவில் தான் அதிக வரி செலுத்துகிறோம்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications