இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு Remdesivir மருந்து மீதான இறக்குமதி வரியைச் செவ்வாய்க்கிழமை முழுமையாக நீக்கி அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் Remdesivir மருந்தின் விலை பெரிய அளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் அக்டோபர் 31 வரையில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் Remdesivir மற்றும் active pharmaceutical ingredients (API) ஆகிய மருந்துகளுக்கு இறக்குமதி வரி முழுமையாக நீக்கப்பட்டு உள்ளது என அறிவித்துள்ளது.

இதேபோல் Remdesivir மருந்தை உள்நாட்டிலேயே தயாரிக்கவும், இதன் உற்பத்தியை அதிகரிக்கவும், இம்மருந்து தயாரிப்புக்குப் பயன்படுத்தும் Beta Cyclodextrin (SBEBCD) என்ற மூலப்பொருளுக்கு இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இதன் மூலம் கொரோனா தொற்றுப் பாதிப்பு அடைந்த மக்களுக்குக் குறைந்த விலையில் Remdesivir மருந்து கிடைப்பது மட்டும் அல்லாமல் தேவையான அளவிற்கு இறக்குமதி செய்யவும், இந்தியாவிலேயே உற்பத்தி செய்யவும் ஏதுவான சூழ்நிலை உருவாக்கப்பட்டு உள்ளது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இதேவேளையில் இந்தியாவில் இருந்து Remdesivir, API மற்றும் அதனைத் தொடர்புடைய மருந்துகள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்ய ஏப்ரல் 11 முதல் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த ஏற்றுமதி தடை மூலம் இந்தியா முழுவதும் போதுமான மருந்து பயன்பாட்டிற்குக் கிடைக்கும்.
இறக்குமதி வரி தளர்வுக்கு முன்பு Remdesivir, API மற்றும் Beta Cyclodextrin ஆகிய மருந்துகள் மீது மத்திய அரசு 10 சதவீத இறக்குமதி வரி, ICST மற்றும் இதர வரி விதிப்புகள் சேர்த்து மொத்தம் 16.5 சதவீத வரி விதிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications