2030-ம் ஆண்டுக்குள் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயரும் என S&P குளோபல் ரேட்டிங்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு நிலவரப்படி அமெரிக்கா, சீனா, ஜெர்மனி மற்றும் ஜப்பானை ஆகிய நாடுகளுக்கு பின்பு உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. இந்த நிலையில் அடுத்த 7 வருடத்தில் இந்தியா 3வது இடத்திற்கு முன்னேற உள்ளது.

S&P இன் குளோபல் கிரெடிட் அவுட்லுக் அறிக்கை 2024, நடப்பு நிதியாண்டின் இறுதியில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி சுமார் 6.4 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2026-27 நிதியாண்டில் 7 சதவீத ஜிடிபி வளர்ச்சியுடன், 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உயரும் என செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் தனது கணிக்கப்பை வெளியிட்டு உள்ளது.
அடுத்த நிதியாண்டில் (2024-25) ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.4 சதவீதம் என்ற நிலையான அளவீட்டை பதிவு செய்யும், அதற்குப் பின்பு அதாவது 2025-26 ஆம் நிதியாண்டில் 6.9 சதவீதமாக உயரும் என்றும், 2026-27 ஆம் நிதியாண்டில் 7 சதவீதமாக உயரும் என்றும் S&P இன் குளோபல் நிறுவனம் தனது அறிக்கையில் தெவித்துள்ளது.
இதேவேளையில் சீன அரசுக்கான கடன் மதிப்பீட்டை ஸ்டேபிள் என்ற அளவீட்டில் இருந்து நெகட்டிவ் என மாற்றியுள்ளது மூடிஸ். உலகின் 2வது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் சீனாவின் கடன் அளவு தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் குறுகிய கால பொருளாதார வளர்ச்சி குறைவாக இருக்கும் என கூறியது மட்டும் அல்லாமல் கிரெடிட் ரேட்டிங்-ஐ குறைத்துள்ளது மூடிஸ் அமைப்பு.
இதேவேளையில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டில் நிலையார 4 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் என தெரிவித்துள்ளது. இதேபோல் 2026- 2030 வரையிலான காலக்கட்டத்தில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 3.8 சதவீதமாக இருக்கும் என அறிவித்துள்ளது.
More From GoodReturns

சீன CCTV கேமராக்களுக்கு மொத்தமாக செக்.. மத்திய அரசின் புதிய முடிவு..!!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications