இந்தியாவில் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில் பொதுத் தேர்தல் நடைபெறும் வேளையில் இந்திய மக்கள் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த உலக நாடுகளும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
இதற்கு முக்கியமான காரணம் சர்வதேச அளவில் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் இந்தியா முன்னோடியாக இருக்கும் காரணத்தால் முதலீட்டாளர்களின் முக்கிய டார்கெட் ஆக மாறியுள்ளது இந்தியா. இந்தச் சூழ்நிலையில் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் முக்கியமான விஷயத்தைத் தெரிவித்துள்ளார்.

மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் ஜனவரி 3 ஆம் தேதி புதுதில்லியில் பாரத் உத்சவ் ஆத்மநிர்பர் திறப்பு விழாவில் பேசுகையில் வரவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு முன் இந்தியாவின் பொருளாதாரம் 4 டிரில்லியன் டாலர் பொருளாதார அளவீட்டைத் தொடும் எனத் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அவர் பேசுகையில், அடுத்த 2-2.5 ஆண்டுகளில், இந்தியாவின் ஜிடிபி 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும். இந்திய பொருளாதாரம் குறித்து வெளியான பெரும்பாலான மதிப்பீட்டின் படி 2027 ஆம் ஆண்டளவில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய ஜிடிபி கொண்ட நாடாக இருக்கும் என்று பியூஷ் கோயல் பேசினார்.
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவரான பிபேக் டெப்ராய், இந்தியாவின் பொருளாதாரம் 2024 ஆம் ஆண்டில் 4 டிரில்லியன் டாலர் அளவீட்டைத் தொடும் என ஏற்கனவே கூறியிருந்த நிலையில், தற்போது மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பொதுத் தேர்தலுக்கு முன்பு 4 டிரில்லியன் டாலர் அளவீட்டைத் தொடும் எனக் கூறினார்.
இந்தியாவின் ஜிடிபி தற்போது 3.6 டிரில்லியன் டாலர் அளவில் இருக்கும் வேளையில் அடுத்த 5 மாதத்தில் 400 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. இதேவேலையில் இடைக்காலப் பட்ஜெட் அறிவிப்புகள், தேர்தலுக்கு முன்பு நிலவும் முதலீட்டு மந்த நிலை ஆகியவை பொருளாதார வளர்ச்சியைக் கணிசமாகப் பாதிக்கும் வாய்ப்புகளைக் கொண்டு உள்ளது.

கடந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டி பரபரப்பாக நடந்து வந்த வேளையில் இந்தியாவின் பொருளாதாரம் 4 டிரில்லியன் டாலர் அளவீட்டை தாண்டியுள்ளது என ஒரு போட்டோ டிவிட்டரில் டிரெண்டானது. பொதுவாக இந்தியாவின் ஜிடிபி தரவுகளை மத்திய அரசு வெளியிடும் அல்லது சர்வதேச பொருளாதார அமைப்புகள் தனது சொந்த ஆய்வுகளின் படி கணிப்பை வெளியிடும்.
ஆனால் ஒரு யூடியூப் தளத்தில் 20 நாடுகளின் பொருளாதாரம் என்ற வீடியோ வெளியானது. இதில் இந்தியாவின் ஜிடிபி 4 டிரில்லியன் டாலர் அளவீட்டை எட்டியுள்ளது என டேட்டாவை வெளியிட்டது, இதையும் நம்பி மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல் பலரும் பகிர்ந்தனர். ஆனால் இது உண்மையான தரவுகள் இல்லை எனத் தமிழ் குட்ரிட்டன்ஸ் அப்போதே விளக்கம் கொடுத்தது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications