இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் ஆக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவராகவும், நாட்டின் மிகப்பெரிய பணக்காரர் ஆகவும் விளங்கும் முகேஷ் அம்பானி, இந்தியப் பொருளாதாரம் அடுத்த 20 வருடத்திற்குள்ள உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் டாப் 3 இடத்திற்குள் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இதுமட்டும் அல்லாமல் அடுத்த 20 வருடத்திற்குள் இந்திய மக்களின் தனிநபர் வருமானம் 2 மடங்கு அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
டாப் 3 இடத்தில் இந்தியா
உலகின் மிகப்பெரிய சமுக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் உடன் முகேஷ் அம்பானி வீடியோ கான்பிரன்ஸ் முறையில் பேசிய போது, அடுத்த 20 வருடத்தில் இந்தியா, உலகின் தலைசிறந்த பொருளாதார நாடுகள் மத்தியில் டாப் 3 இடத்தைப் பிடிக்கும் எனப் பேசினார்
இந்திய மக்களின் தனிநபர் வருமானம்
இந்திய மக்களின் தனிநபர் வருமானம் இந்தக் காலகட்டத்தில் 2 மடங்கு உயரும் எனவும், தற்போது இந்திய மக்களின் தனிநபர் வருமானம் 1800 முதல் 2000 டாலராக உள்ளது. இது அடுத்த 20 வருடத்தில் 5000 டாலர் வரையில் உயரும் எனவும் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
இந்தியக் குடும்பங்கள்
இதேபோல் இந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் 50 சதவீத குடும்பங்கள் ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்சம் 3 முதல் 4 சதவீத வளர்ச்சியை அடைவார்கள் எனவும் முகேஷ் அம்பானி, மார்க் ஜூக்கர்பெர்க்-யிடம் பேசினார்.
டிஜிட்டல் சமூகம்
இவை அனைத்திற்கும் மேலாக இந்தியா அடுத்த 20 வருட காலத்தில் முன்னேற்றம் அடைந்த டிஜிட்டல் சமூகமாக இருக்கும் எனவும், இந்த முக்கிய வளர்ச்சிக்கு இளைஞர்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள் எனவும் முகேஷ் அம்பானி, மார்க் ஜூக்கர்பெர்க் உடனான வீடியோ சாட்டில் பேசினார்.
5.7 பில்லியன் டாலர்
மார்க் ஜூக்கர்பெர்க்-ன் பேஸ்புக் நிறுவனம், டெலிகாம் மற்றும் டிஜிட்டல் வர்த்தகச் சேவை பிரிவான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் சுமார் 5.7 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைச் செய்துள்ளது. இந்தக் கூட்டணி முதலீட்டின் மூலம் இந்தியாவில் டிஜிட்டல் சேவைகள் மற்றும் சேவை தரம் பெரிய அளவில் உயரும் என நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications