இந்தியாவுக்கு அடுத்த 10 வருடம் ராஜயோகம்.. ஜேபி மோர்கன் சிஇஓ சொன்ன கணிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவின் பணவீக்கம் நினைத்ததைக் காட்டிலும் வேகமாகவும், அதிகமாகவும் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது.

 

புதன்கிழமை முடிந்த அமெரிக்கப் பெடரல் ரிசர்வ்-ன் இரு நாள் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 0.75 சதவீதம் உயர்த்தியது. இது சர்வதேச சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது போலவே இந்திய சந்தையைப் பாதித்தது.

இந்த நிலையில் ஜேபி மோர்கன் சிஇஓ சொன்ன கணிப்பு இந்திய முதலீட்டாளர்களை மட்டும் அல்லாமல் சர்வதேச முதலீட்டாளர்களுக்கும் நம்பிக்கை கொடுத்துள்ளது.

இந்த 3 பங்குகளை வாங்கலாம்.. தரகு நிறுவனத்தின் சூப்பர் பரிந்துரை! இந்த 3 பங்குகளை வாங்கலாம்.. தரகு நிறுவனத்தின் சூப்பர் பரிந்துரை!

பொருளாதாரம்

பொருளாதாரம்

உலக நாடுகள் பொருளாதாரப் பாதிப்பாலும், பணவீக்க பாதிப்பாலும் அதிகப்படியான நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் இந்தியாவுக்கு மட்டும் பல வகையில் பல விஷயங்கள் சாதகமாக அமைந்துள்ளது.

 மோர்கன் சேஸ் சிஇஓ

மோர்கன் சேஸ் சிஇஓ

இந்நிலையில் இந்தியா உலக நாடுகள் பொறாமைப்படக்கூடிய டிஜிட்டல் இன்பராஸ்டக்சர் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் அடுத்த 10 வருடத்திற்கு உலகிலேயே வேகமாக வளர்ச்சி அடையும் நாடாக இந்தியா விளங்கும் என அமெரிக்காவின் முன்னணி முதலீட்டு வங்கியான ஜேபி மோர்கன் சேஸ்-ன் சிஇஓ ஜேமி டிமோன் தெரிவித்துள்ளார்.

 ஜேமி டிமோன்
 

ஜேமி டிமோன்

இதன் மூலம் குளோபல் சப்ளை செயின் சர்வதேச நிறுவனங்கள் சீனா-வை மட்டுமே நம்பியிருக்கும் நிலை மாறும் எனவும் ஜேமி டிமோன் தெரிவித்துள்ளார். ஜேபி மோர்கன் சேஸ் சர்வதேச பொருளாதாரம், வர்த்தகச் சந்தையைத் தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து ஜேபி மோர்கன் சேஸ் சிஇஓ ஜேமி டிமோன் தெரிவித்துள்ளார்.

இந்தியா

இந்தியா

ரஷ்யா - உக்ரைன் போர், சீனா - தைவான் பிரச்சனைகளில் உலக நாடுகள் சந்தித்ததைக் காட்டிலும் இந்தியா குறைவான பாதிப்பை மட்டுமே சந்தித்தது. மேலும் இந்தியா கடந்த 10 வருடத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது, குறிப்பாக டிஜிட்டல் வங்கி சேவை, டிஜிட்டல் சேவைகள் ஆகியவை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.

 சீனா

சீனா

சீனாவை மட்டுமே சார்ந்து இருக்கும் உலகளாவிய விநியோகச் சங்கிலியைப் பிற நாட்டு நிறுவனங்கள் இந்தியா மற்றும் பிற நாடுகளில் தனது உற்பத்தி தளத்தை உருவாக்குவதற்கான முடிவை எடுத்தால் மட்டுமே முடியும்.

கிஃப்ட் சிட்டி

கிஃப்ட் சிட்டி

மேலும் குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் உள்ள லேசாக ஒழுங்குபடுத்தப்பட்ட குஜராத் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக்-சிட்டி (கிஃப்ட் சிட்டி) விரைவாகத் துவங்குவது இந்தியாவுக்கு நிதி துறையில் பெரிய அளவில் பலன் அளிக்கும் என்றும் ஜேமி டிமோன் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India will be fastest-growing economy in world for next 10 years: JPMorgan Chase's Jamie Dimon

India will be fastest-growing economy in world for next 10 years says JPMorgan Chase's Jamie Dimon based on how India has built enviable digital infrastructure.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X