உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா 2050க்குள் மாறும்.. lancet ஆய்வு..!

இந்தியா அடுத்த 2050 வாக்கில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமான மாறும் என்று ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

அதோடு 2030க்குள் உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

இது குறித்து வெளியான ஆய்வறிக்கையில், சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அடுத்த படியாக இந்தியா இருக்கும் என லான்சென்ட் மெடிக்கல் ஜர்னலின் (Lancent Medical Journal) ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

4வது பெரிய பொருளாதாரம்

4வது பெரிய பொருளாதாரம்

உலகளவில் உள்ள நாடுகளில் உழைக்கும் மக்கள் தொகை குறித்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டில் இந்தியா உலகின் 7-வது மிகப் பெரிய பொருளாதாரமாக இருந்தது. இதை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், 2030 ஆண்டு வாக்கில் இந்தியா நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா தற்போது எந்த இடம்?

இந்தியா தற்போது எந்த இடம்?

2030ம் ஆண்டில், இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அடுத்த படியாக இந்தியா இருக்கும். தற்போது, இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாகும். பிரான்ஸ் மற்றும் பிரிட்டனும் இந்தியாவை விட முன்னிலையில் உள்ளன. 2100 வாக்கில் ஜப்பான் மீண்டும் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

நிதி ஆயோக் தலைவர் என்ன சொன்னார்?

நிதி ஆயோக் தலைவர் என்ன சொன்னார்?

மத்திய அரசின் மதிப்பீடும் இதே தகவலை அளிக்கிறது நிதி ஆயோக் தலைவர் ராஜீவ் குமார், இந்த ஆண்டு மே மாதம் வெளியிட்ட அறிக்கையில், 2047ம் ஆண்டில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று கூறினார்.

மூன்றாவது இடத்திற்கு இந்தியா முன்னேறும்

மூன்றாவது இடத்திற்கு இந்தியா முன்னேறும்

கடந்த ஆண்டு டிசம்பரில், ஜப்பானின் பொருளாதார ஆராய்ச்சி மையம் (Center for Economic Research, Japan) தனது ஒரு ஆராய்ச்சியில் 2029ம் ஆண்டில் இந்தியா ஜப்பானை முந்திக்கொண்டு உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று கூறியது. ஜப்பானின் இந்த மதிப்பீடு கொரோனா வைரஸ் பரவலுக்கு முந்தைய மதிப்பீடு ஆகும்.

2025ல் 5 டிரில்லியன் டாலர் கஷ்டம்

2025ல் 5 டிரில்லியன் டாலர் கஷ்டம்

ஆனால் கொரோனா பெருந்தொற்றுநோய் காரணமாக, 2025 வாக்கில், இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கு சிறிது தாமதமாகலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதோடு சீனாவிலும் இந்தியாவிலும் உழைக்கும் மக்கள்தொகையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது என்றும் லான்செட் பத்திரிகை எச்சரித்தது. அதே நேரம் நைஜீரியாவில் உழைக்கும் மக்கள் தொகை அதிகரிக்கும் என்றும் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

இந்தியா முதலிடம்

இந்தியா முதலிடம்

எனினும் உழைக்கும் மக்கள் தொகை அடிப்படையில் இந்தியா முதலிடத்திலேயே இருக்கும். 2100 வரை இந்தியா உலகளவில் மிகப்பெரிய உழைக்கும் மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கும் என்று அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவை அடுத்து நைஜீரியா, சீனா மற்றும் அமெரிக்கா இருக்கும் என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+