உலக வங்கி சமீபத்தில் வெளியிட்ட ஆய்வில், கொரோனா தொற்றுநோயால் 2020 ஆம் ஆண்டில் வறுமை கோட்டிற்குத் தள்ளப்பட்ட மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 80 சதவீதம் பேர் இந்தியாவைத் தேர்ந்தவர்கள் எனத் தெரிவித்து இருந்தது.
இதேவேளையில் 100 மில்லியன் டாலருக்கும் அதிகமாகச் சொத்து மதிப்பு வைத்துள்ளது பணக்காரர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியா உலகளவில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
உலகில் பிற எந்த நாடுகளிலும் இல்லாத வகையில் இந்தியாவில் ஏழை மற்றும் பணக்காரர்கள் மத்தியில் அதிகளவிலான வித்தியாசம் உருவாகியுள்ளது.
செண்டி மில்லியனர்கள்
$100 மில்லியன் சொத்துக்களைக் கொண்ட தனிநபர்களைச் செண்டி மில்லியனர்கள் என அழைக்கப்படுகிறது, அதாவது 830 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருப்பவர்கள். இந்த நிலையில் செண்டி மில்லியனர்கள் குறித்த முதல் உலகளாவிய ஆய்வில், அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளைத் தொடர்ந்து இந்தியா 3வது இடத்தில் உள்ளது.
இந்தியா
உலகளவில் முதலீடுகள் பெரிய அளவில் மாறியுள்ளதை அடுத்து இந்தியாவில் செண்டி மில்லியனர்கள் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. அடுத்தப் பத்து ஆண்டுகளில் இந்தப் பட்டியலில் அமெரிக்கா, சீனா-வை பின்னுக்குத்தள்ளி இந்தியா முதல் இடத்தைப் பிடிக்க அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது எனச் சர்வதேச முதலீட்டு இடம்பெயர்வு ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸ் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
25,490 சென்டி மில்லியனர்கள்
உலகளவில் 25,490 சென்டி மில்லியனர்கள் உள்ள நிலையில், இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி 1,132 சென்டி மில்லியனர்கள் கொண்டு 3வது இடத்தில் உள்ளது. இப்பட்டியலில் தொழில்நுட்ப வல்லுனர்கள் , நிதியாளர்கள், பன்னாட்டுத் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் பணக்காரர்களின் வாரிசுகள் உள்ளனர்.
அமெரிக்கா, சீனா
அமெரிக்கா 9,730 பெரும் பணக்காரர்களுடன் முன்னணியில் உள்ளது, இதன் மூலம் உலகளவில் சென்டி-மில்லியனர்களில் 38% அமெரிக்காவில் உள்ளனர். சீனாவில் 2,021 சென்டி மில்லியனர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை 2032 ஆம் ஆண்டுக்குள் இந்தியா முந்திவிடும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
100 மில்லியன் டாலர்
இங்கிலாந்து 968 சென்டி மில்லியனர்களுடன் 4வது இடத்திலும், ஜெர்மனி 966 பேருடன் 5வது இடத்திலும் உள்ளது. 1990களில் 30 மில்லியன் டாலர் வைத்திருந்தாலே super wealthy எனக் கூறப்பட்ட நிலையில் தற்போது சொத்துக்களின் மதிப்பு அதிகரிப்புக் காரணமாகச் சென்டி மில்லியனருக்கான அளவீடு 100 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?



Click it and Unblock the Notifications