உலக நாடுகளுக்கு போட்டியாக இந்தியா மாறும்.. எப்படி தெரியுமா.. மார்கன் ஸ்டான்லி அறிக்கையை பாருங்க!

இந்தியாவின் அளவு என்பது அதன் முக்கிய சொத்துகள். இதுவே இந்தியா சர்வதேச அளவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமான வளர்ச்சி காரணமாக இருக்கும் என்று மார்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.

2027-க்குள் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் என்றும் மார்கன் ஸ்டான்லி அறிக்கையானது சுட்டிக் காட்டியுள்ளது.

மார்கன் ஸ்டான்லியின் அறிக்கையில், இந்தியாவின் ஜிடிபி விகிதமானது அடுத்த 10 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரிக்கும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.

 ஜிடிபி வளர்ச்சி

ஜிடிபி வளர்ச்சி


இது தற்போது 3.4 டிரில்லியன் டாலராக இருக்கும் நிலையில், இது 8.5 டிரில்லியன் டாலராக அதிகரிக்கும் என்றும் கணித்துள்ளது. இந்தியா ஒவ்வொரு ஆண்டும் அதன் ஜிடிபி விகிதத்தில் 400 பில்லியன் டாலர்களை சேர்த்து வருகின்றது. இது அமெரிக்கா சீனாவையே மிஞ்சும் அளவாக உள்ளது.

இந்தியாவின் சந்தை மூலதனம்

இந்தியாவின் சந்தை மூலதனம்

இந்தியாவின் சந்தை மூலதனமானது 3.4 டிரில்லியன் டாலரில் இருந்து, 2032ல் 11 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது சர்வதேச அளவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக வளர்ச்சி காண உதவும்.
இது தொடர்ந்து நாட்டில் முதலீடுகள் அதிகரித்து வரும் நிலையில், வேலை வாய்ப்புகள் அதிகரிக்க வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பொருளாதாரத்தினை ஊக்குவிக்கலாம்.

அரசின் ஊக்குவிப்பு சலுகைகள்

அரசின் ஊக்குவிப்பு சலுகைகள்

ஒரு ஒருங்கிணைந்த உள்நாட்டு சந்தையை உருவாக்கும் சரக்கு மற்றும் சேவை வரியில் தெளிவாக இருந்தது. இதற்கிடையில் கார்ப்பரேட் வரி குறைப்பு மற்றும் இந்தியாவுக்கு உள்ளாகவும், வெளி நாட்டு முதலீடுகளையும் ஊக்குவிக்கும் விதமாக, இந்திய அரசு பல திட்டங்களை அறிவித்து வருகின்றது. இதன் காரணமாக முதலீடுகள் அறிவித்து வருகின்றன.

வளர்ச்சி காண காரணம்

வளர்ச்சி காண காரணம்


இது இந்தியா மிக வேகமாக வளர்ச்சி காண காரணமாக அமையும்,. இந்தியா ஏற்கனவே ஏற்றுமதியில் கணிசமான பங்கினை கொண்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தொற்று நோய்க்கு பிறகு கணிசமான உச்சத்தினை எட்டியுள்ளது. ஏனெனில் கார்ப்பரேட் நிறுவனங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பணிபுரிய பழகிக் கொண்டுள்ளன. இதன் காரணமாக உற்பத்தி அதிகரிக்கலாம். இது ஏற்றுமதியினை அதிகரிக்க வழிவகுக்கலாம்.

சீனாவால் இந்தியாவுக்கு பலன்

சீனாவால் இந்தியாவுக்கு பலன்

இதற்கிடையில் இந்தியாவின் ஜிடிபி விகிதம் கூடுதலாக 3 டிரில்லியன் டாலர் வளர்ச்சி பெற இன்னும் ஏழு ஆண்டுகள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் சீனாவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், கொரோனாவின் தாக்கம் இருந்து வருகின்றது. இதன் காரணமாக லாக்டவுன் நிலவி வருகின்றது. இதனால் இது இந்தியாவின் வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல் ஜிடிபி வளர்ச்சி

ரியல் ஜிடிபி வளர்ச்சி

இந்தியாவில் தற்போதும் பணிபுரியும் வயதினரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இது நீண்டகால நோக்கில் வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம். இந்தியாவின் சராசரி வயது என்பது சீனர்களை விட 11 வயது குறைவாகும்.

இந்தியாவின் ரியல் ஜிடிபி வளர்ச்சியானது சராசரியாக வரும் தசாப்தத்தில் 6.5% ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் சீனாவின் வளர்ச்சி 3.6% ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்கட்டமைப்பு வசதி

உள்கட்டமைப்பு வசதி

இந்தியா தற்போது அதன் பொது உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முதலீடுகளை அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக ரயில், சாலை உள்ளிட்ட பலவற்றிலும் முதலீடுகள் அதிகரித்து வருகின்றது. மற்ற நாடுகளில் தனியார் நெட்வொர்க்குகள் வலுவடைந்து வந்தாலும், இந்தியாவில் பொது உள்கட்டமைப்புகளுக்கு முதலீடுகள் அதிகரித்து வருகின்றது. அதன் டிஜிட்டல் வளர்ச்சியினையும் ஊக்குவித்து வருகின்றது. இது வணிகம் செய்வதை எகிதாக்க ஊக்குவிக்கிறது. மொத்தத்தில் இந்தியாவின் வளர்ச்சிக்கு இது சாதகமாக அமையலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+