இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், 2025 ஆம் ஆண்டில் இந்தியா ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டுவதற்கான வாய்பைக் கொண்டுள்ளது. International Monetary Fund's (IMF) சமீபத்தில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த கணிப்பில் இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என கூறப்பட்டுள்ளது. இந்த முன்னேற்றம், இந்தியாவின் வளர்ச்சிச் சாதனைகளுக்கும், அதன் நிலையான பொருளாதார வளர்ச்சி பயணத்துக்கும் ஒரு முக்கியமான ஒன்றாகும்.
IMF ஏப்ரல் 2025 உலக பொருளாதார அவுட்லுக் (WEO) அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 4.187 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இது ஜப்பானின் மதிப்பிடப்பட்ட 4.186 டிரில்லியன் டாலரை விட சிறிய அளவில் அதிகமாக உள்ளது. இதனால், இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறும்.

2025-ஆம் ஆண்டில் உலகளவில் மிகப்பெரிய பொருளாதாரங்களை கொண்ட நாடுகள் வரிசைப்படி அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி ஆகும். அமெரிக்கா சுமார் 30.51 டிரில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் (GDP) முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து சீனா 19.23 டிரில்லியன் டாலர் GDPயுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஜெர்மனி, 4.74 டிரில்லியன் டாலர் GDPயுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த வரிசையில் இந்தியா 4.187 டிரில்லியன் டாலர் GDPயுடன் நான்காவது இடத்தையும், ஜப்பான் 4.186 டிரில்லியன் டாலருடன் ஐந்தாவது இடத்தையும் பெறும் என ஐஎம்எஃப் கணிக்கிறது. இந்த தரவரிசை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பல காரணங்களால் சாத்தியமாகியுள்ளது, நாட்டின் வளர்ச்சியடையும் மக்கள் தொகை, உள்நாட்டு தேவையின் அதிகரிப்பு, தொழில் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி, அமைப்புசார் (infrastructure) சீர்திருத்தங்கள், முதலீட்டுப் பண்பாட்டை ஊக்குவிக்கும் சூழல் ஆகியவை எல்லாம் சேர்ந்து, இந்தியா ஒரு நீண்டகால வளர்ச்சி பாதையில் பயணிக்கிறது என்பதை ஐஎம்எஃப் குறிப்பிடுகிறது.
2023-24 ஆம் நிதியாண்டில், இந்தியா 8.2% வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்தது. இது 2022-23 இல் இருந்த 7% வளர்ச்சியை விட உயர்ந்தது. ஆனால், சமீபத்திய காலாண்டுகளில் வளர்ச்சி விகிதம் ஓரளவு குறைந்துள்ளது. FY25-இன் மூன்றாவது காலாண்டில் வளர்ச்சி 6.2%ம், முந்தைய காலாண்டில் 5.6%ம் குறைந்துள்ளது. அதனால், FY25 முழு ஆண்டுக்கான வளர்ச்சி இலக்காக உள்ள 6.5%-ஐ அடைவது சற்று சவாலாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஐஎம்எஃப் தனது சமீபத்திய அறிக்கையில் 2025-26 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை 6.5% லிருந்து 6.2%ஆக குறைத்துள்ளது. இதற்கான முக்கிய காரணம், உலகளாவிய வர்த்தக சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மை மற்றும் அமெரிக்கா-சீனா வர்த்தக போர் ஆகியவையாகும்.
அமெரிக்கா இந்தியா மீது சுமார் 27% வரி விதித்தது. இந்தியா உள்பட சில நாடுகளுக்கு மூன்று மாதங்களுக்கு தற்காலிக சலுகை அளிக்கப்பட்டது. இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் வர்த்தக சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வகையான வரிகளும் வர்த்தகத் தடைகளும், இந்தியாவின் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கலாம். குறிப்பாக, முதலீட்டாளர்கள் உறுதிப்பாட்டுடன் முதலீடு செய்ய தயங்கும் சூழல் உருவாகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பொருளாதார ஆலோசகர் பியர்-ஒலிவியர் கௌரிஞ்சஸ் கூறுகையில், உலகளாவிய சந்தைகள் நிலையற்ற சூழ்நிலையில் உள்ளன. வணிகங்கள் முதலீட்டுத் திட்டங்களை மறு மதிப்பீடு செய்கின்றன. நிதி நிறுவனங்களும் கடன் கொள்கைகளை மாற்றலாம் என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் வளர்ச்சி பாதை தற்போது உலக நாடுகளுக்கு ஒரு உதாரணமாக இருக்கிறது. ஒரு வளர்ந்துவரும் நாடாக இருந்த இந்தியா, இப்போது முன்னணி பொருளாதார நாடுகளுடன் போட்டியிடும் நிலையில் உள்ளது. 2025 ஆம் ஆண்டில் ஜப்பானை முந்தி நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறும் இந்த முன்னேற்றம், நமது நாட்டின் பன்முக வளர்ச்சிக்குச் சான்றாகும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications