இந்தியாவில் பால் மற்றும் பால் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படலாம் என்று பல அறிக்கைகள் வெளிவரும் வேளையில், இந்த தட்டுப்பாட்டை சரி செய்ய வெளிநாட்டில் இருந்து பால் பொருட்கள் இறக்குமதி செய்யப்படலாம் என்று இதற்கான சந்தை நிலவரத்தை ஆய்வு செய்து வருவதாக சில நாட்கள் முன்பு மத்திய அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து கால்நடை வளர்ப்பவர்கள், விவசாயிகள், அரசியல் தலைவர்கள் என பல தரப்பினர் வெளிநாட்டில் இருந்து பால் மற்றும் பால் பொருட்களை இறக்குமதிக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். இதேவேளையில் தான் குஜராத் அமுல் நிறுவனம் பெங்களூரில் பால், தயிர்-ஐ ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதாக அறிவித்தது பெரும் பிரச்சனையாக மாறியது.

இந்த நிலையில் இந்தியாவில் பால் மற்றும் பால் பொருட்கள் எதுவும் இறக்குமதி செய்யப்படாது என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு வெள்ளிக்கிழமை விளக்கம் கொடுத்துள்ளது விளக்கம் கொடுத்துள்ளது. இந்தியாவில் கடைசியாக பால் பொருட்களை இறக்குமதி செய்தது 2011 ஆம் ஆண்டில்.
இந்தியாவில் வெண்ணெய் மற்றும் பிற பால் பொருட்களை இறக்குமதி செய்யப்பட மாட்டாது, மேலும் பற்றாக்குறையை தீர்க்க இதுவரையில் பயன்படுத்தப்படாத உள்நாட்டு சந்தைகளின் உதவியுடன் விநியோகங்கள் மேம்படுத்தப்படும் என்று மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா வெள்ளிக்கிழமை விளக்கம் கொடுத்துள்ளார்.
பால் பொருட்கள், குறிப்பாக வெண்ணெய் மற்றும் நெய் போன்றவற்றின் கையிருப்பு முந்தைய ஆண்டைக் காட்டிலும் குறைவாக இருப்பதாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை அமைச்சக அதிகாரி கடந்த வாரம் கூறினார். இது இந்தியா முழுவதும் பெரும் பெரும் பிரச்சனையாக வெடித்தது, இந்த நிலையில் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை அமைச்சகம் அறிக்கை மூலம் தெளிவுப்படுத்தியுள்ளது.

மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை செயலர் ராஜேஷ் குமார் சிங் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் 2022-23 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பால் உற்பத்தி மந்தமாகவே உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் மாடுகளுக்கு வந்த தோல் நோய், இந்த நோய் காரணமாக பால் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications