இந்தியா 2024 முதல் 2030 வரையிலான அடுத்த 7 ஆண்டுகளில் நாட்டின் அடிப்படை உள்கட்டமைப்புக்காக ரூ.143 லட்சம் கோடி முதலீடு செய்யும் என்று கிரிசில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு சாலை, மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்புகள் சிறப்பாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். ஆகையால் எந்தெவொரு அரசும் முதலில் அடிப்படை உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தும்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும் நாட்டின் அடிப்படை உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. அடிப்படை உள்கட்டமைப்புகள் உருவாக்குவதற்காக மத்திய அரசு மேற்கொள்ளும் என செலவினங்கள் தொடர்பாக தர நிர்ணய நிறுவனமான கிரிசில் தனது CRISIL Infrastructure Yearbook 2023-ல் தெரிவித்துள்ளது.
அதில், 2024 முதல் 2030 வரையிலான அடுத்த 7 ஆண்டுகளில் அடிப்படை உள்கட்டமைப்புக்காக இந்தியா மேற்கொள்ளும் செலவினம் இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்து ரூ.143 லட்சம் கோடியாக இருக்கும். மேலும், உள்கட்டமைப்பு செலவினத்தில் சாலைகள் மற்றும் மின்சாரம் போன்ற முக்கிய துறைகள் கணிசமான பங்கினை கொண்டு இருக்கும்.
அதேசமயம் மின்சார வாகனங்கள், சோலார், காற்றாலை மற்றும் ஹைட்ரஜன் போன்றவற்றிலும் முதலீட்டு செலவினம் அதிகரிக்கும் என்று கிரிசில் தெரிவித்துள்ளது. 2017ம் ஆண்டு முதல் கடந்த 7 ஆண்டுகளில் இந்தியா அடிப்படை உள்கட்டமைப்புக்காக ரூ.67 லட்சம் கோடி செலவிட்டு இருந்தது.
கிரிசில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான அமிஷ் மேத்தா கூறுகையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சராசரியாக 6.7 சதவீதம் வளர்ச்சி கண்டு 2031 நிதியாண்டில் பெரிய பொருளாதாரமாக இருக்கும்.
இந்தியாவில் தற்போது தனிநபர் வருமானம் 2,500 அமெரிக்க டாலராக உள்ளது, இது 2031ம் ஆண்டில் 4,500 அமெரிக்க டாலராக உயரும். மேலும் நடுத்தர வருமானம் கொண்ட நாடாக இந்தியா உருவாகும். இந்த வளர்ச்சி, அனைத்து வகையான உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிலைத்தன்மையை ஒருங்கிணைப்பதில் தீவிர கவனம் செலுத்துவதால் சாத்தியமாகும்.
2030ம் ஆண்டுக்குள் இந்தியாவின் ஒட்டு மொத்த வாகன விற்பனையில் மின்சார வாகனங்களின் பங்கு 30 சதவீதத்தை எட்டும். 2028ம் ஆண்டு வரை இரு சக்கர வாகன விற்பனை மற்ற வாகனங்களை விட அமோகமாக இருக்கும். மாநில போக்குவரத்து நிறுவனங்களை பொறுத்து மின்சார பஸ்களுக்கான விற்பனை இருக்கும் என்று தெரிவித்தார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications