இந்தியா சீனாவையே 2023ல் விஞ்சும்.. எப்படி தெரியுமா?

உலகின் மக்கள் தொகை அதிகம் உள்ள சீனா என்பது தெரிந்த விஷயம் தான். ஆனால் இந்த இடத்தினை விரைவில் இந்தியா எட்டலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.

அடுத்த ஆண்டில் இந்தியா மக்கள் தொகை அளவில் சீனாவினையே விஞ்சலாம் என ஐ நா அறிக்கை தெரிவித்துள்ளது.

அதோடு 2022 நவம்பர் நடுப்பகுதியில் உலக மக்கள் தொகை எட்டு பில்லியனை எட்டலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

சீனாவினை பிரேக் செய்யலாம்

சீனாவினை பிரேக் செய்யலாம்

ஆன உலகின் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடான சீனாவின் முதலிடத்தினை, விரைவில் இந்தியா பிடிக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை, மக்கள் தொகை விவகாரங்கள் பிரிவு, நவம்பர் 15, 2022 அன்று உலக மக்கள் தொகை 2022ல் 8 பில்லினை எட்டும் என மதிப்பிட்டுள்ளன.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

உலக மக்கள் தொகையானது 1950-க்கு பிறகு மிக மெதுவான விகிதத்தில் இருந்து வளர்ந்து வருகின்றது. கடந்த 2020ல் 1 சதவீதத்திற்கும் கீழாக குறைந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய கணிப்புகளின் படி, உலக மக்கள் தொகை 2030ல் 8.5 பில்லியனாகவும், 2050ல் 9.7 பில்லியனாகவும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

சீனாவையே விஞ்சும்

சீனாவையே விஞ்சும்

இந்த ஆய்வறிக்கையில் தான் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவினை, இந்தியா விஞ்சும் என கணிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகள் கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசியா ஆகும். இதில் கிழக்கு ஆசியாவில் 2.3 பில்லியன் மக்கள் தொகையுடன், உலக மக்கள் தொகையில் 29%மும், தெற்கு ஆசியா 2.1 பில்லியனுடன் 26%மும் பங்கு வகிக்கிறது.

சீனா, இந்தியா 2022 நிலவரம்

சீனா, இந்தியா 2022 நிலவரம்

2022ல் தலா 1.4 பில்லியனுடன் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இரு பெரும் நாடுகளாக உள்ளன.

2050 வரையில் உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேலான அதிகரிப்பு என்பது காங்கோ ஜனநாயக குடியரசு, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் தான்சானியா ஆகிய 8 நாடுகளும் அடங்கும் என தரவுகள் கூறுகின்றன.

எவ்வளவு பேர்?

எவ்வளவு பேர்?

அறிக்கையின் படி சீனாவின் மக்கள் தொகை 1.426 பில்லியன் டாலராகவும், 2022ல் இந்தியாவின் மக்கள் தொகை 1.412 பில்லியனாகவும் உள்ளது. 2050 ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 1.668 பில்லியனாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்தல்

இடம்பெயர்தல்

கடந்த 2010 - 2021-க்கும் இடையில் பத்து நாடுகள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்தோரின் நிக வெளியேற்றத்தினை கண்டுள்ளதாக தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

இதில் பாகிஸ்தானில் இருந்து மட்டும் 16.5 மில்லியனும், இந்தியாவொல் இருந்து 3.5 மில்லியனும், பங்களாதேஷில் இருந்து 2.9 மில்லியனும், நேபாளில் இருந்து 1.6 மிக்கியனும் தற்காலிக தொழிலாளர்கள் மூலம் வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+