உலகின் முன்னணி முதலீட்டு வங்கியாக இருக்கும் கோல்டுமேன் சாச்சஸ் வெளியிட்டுள்ள அறிக்கை உலக நாடுகள் மத்தியில் பெரும் தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை. பொருளாதார வளர்ச்சியில் கடந்த 5 வருடத்தில் பெரும் மாற்றங்கள் பதிவாகியிருக்கும் வேளையில், அடுத்த 50 வருடத்தில் எப்படியிருக்கும் என கோல்டுமேன் சாச்சஸ் வெளியிட்டு உள்ளது.
கோல்டுமேன் சாச்சஸ் வெளியிட்டுள்ள ரிப்போர்ட்-ல் தற்போது உலகில் 5வது பெரிய பொருளாதாரமாக இருக்கும் இந்தியா 2075 ஆம் ஆண்டில் 2வது இடத்தை பிடிக்கும் என அறிவித்துள்ளது. அடுத்த 50 வருடத்தில் இந்திய பொருளாதாரம் ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளை முந்துவதை தாண்டி அமெரிக்காவை முந்த உள்ளது என்பது தான் முக்கியமான விஷயம்.

கோல்டுமேன் சாச்சஸ் அறிக்கையின் படி இன்னோவேஷன் மற்றும் டெக்னாலஜி, அதிகப்படியான மூலதனம், ஊழியர்களின் உற்பத்தி திறன் உயர்வு ஆகியவை இந்தியாவின் பொருளாதாரத்தை 2வது இடத்திற்கு முன்னேற்றும் என கணித்துள்ளது. தற்போது உலகளாவிய ஜிடிபி பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு முன் ஜெர்மனி, ஜப்பான், சீனா, அமெரிக்கா ஆகியவை உள்ளது.
அடுத்த 20 வருடத்தில் இந்தியா பிற நாடுகளை நம்பியிருக்கும் நிலை அதிகளவில் குறையும் என கோல்டுமேன் சாச்சஸ் பொருளாதார வல்லுனர் சாந்தனு சென்குப்தா தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்திய அரசு மாநில அரசுக்கு அளிக்கும் 50 வருட வட்டியில்லா கடன் திட்டத்தை நீட்டிப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
கோல்டுமேன் சாச்சஸ் அறிக்கையின் படி 2075 ஆம் ஆண்டில் உலகின் பெரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் சீனா 57 டிரில்லியன் டாலர் மதிப்புடன் முதல் இடத்தில் இருக்கும், இந்தியா 52.5 டிரில்லியன் டாலர் மதிப்புடன் 2வது இடத்திலும், 51.5 டிரில்லியன் டாலர் மதிப்புடன் அமெரிக்கா 3வது இடத்திலும், 30.3 டிரில்லியன் டாலர் மதிப்புடன் ஐரோப்பா 4வது இடத்திலும், ஜப்பான் 7.5 டிரில்லியன் டாலர் மதிப்புடன் 5வது இடத்திலும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்த 50 வருடத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் இன்னோவேஷன் மற்றும் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கும், 2023 ஆம் ஆண்டின் முடிவில் இந்சியாவின் டெக்னாலஜி துறையின் வருமானம் 245 பில்லியன் டாலராக இருக்கும் என அறிவித்துள்ளது. மேலும் 2075ல் இந்தியாவின் பொருளாதாரத்தில் ஏற்றுமதி மட்டும் 60% இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications