ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி 2025ஆம் ஆண்டிற்கான இறுதி போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இதில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 251 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. 252 ரன்கள் டார்கெட்டுடன் அதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
முதல் விக்கெட்டுக்கு 105 ரன்களை எடுத்து கில் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரோகித் 76 ரன்களில் அவுட் ஆனார். இதனை தொடர்ந்து மற்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக, ஸ்ரேயாஸ் ஐயர் 48 ரன்களும், கே.எல். ராகுல் 34 ரன்களும் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய அங்கம் வகித்தார்கள். இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியைச் சந்திக்காமல் கோப்பையை வென்றுள்ளது. கடந்த ஆண்டு இதேபோல், இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது. அதேபோல், ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி வரை சென்று ஆஸ்திரேலியாவிடம் உலகக்கோப்பையை இழந்தது.

இந்தியா வெற்றி பெற்றது. இதனையடுத்து ஐசிசி தொடர்களில் 7 முறையாகவும், சாம்பியன்ஸ் டிராஃபி 3-வது முறையாகவும் டைட்டில் வின்னர் ஆனது. இதனையடுத்து இந்திய அணிக்கு 19.5 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. நியூசிலாந்து அணிக்கு 9.75 கோடி பரிசு வழங்கப்பட்டது. இதனையடுத்து வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ரசிகர்கள் தொடங்கி பிரபலங்கள் வரை வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்ற வீரர்களின் சொத்துமதிப்பு என்ன என்பது குறித்து அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி கேப்டன் ரோகித் ஷர்மாவில் தொடங்கி குல்தீப் யாதவ் வரை 15 வீரர்கள் எவ்வளவு சொத்துக்களை வைத்துள்ளனர் என்பதை பார்க்கலாம்.
கேப்டன் ரோகித் ஷர்மா சொத்துமதிப்பு, ரூ. 214 கோடி
விராட் கோலி சொத்துமதிப்பு ரூ. 1050 கோடி
சும்பன் கில் ரூ. 34 கோடி
யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரூ. 16 கோடி
அர்ச்தீப் சிங் ரூ. 10 கோடி
ஷ்ரேயாஸ் ஐயர் ரூ. 58 கோடி
ஜாஸ்பிரித் பும்ரா ரூ.60 கோடி
அக்சர் படேல் ரூ. 49 கோடி
கே.எல். ராகுல் ரூ. 101 கோடி
முகமது ஷமி ரூ.47 கோடி
ரிஷப் பண்ட் ரூ.100 கோடி
ஹர்திக் பண்டியா ரூ. 91 கோடி
ரவீந்திர ஜடேஜா ரூ.120 கோடி
வாசிங்டன் சுந்தர் ரூ.32 கோடி
குல்தீப் யாதவ் ரூ.32 கோடி
இதில் விராட் கோலி சொத்து மதிப்பு ரூ.1050 கோடியுடனும், கேப்டன் ரோகித் ஷர்மா ரூ.214 கோடியுடனும் அதிகபட்சமாக உள்ளனர்.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications