உற்பத்திக்கு பெஸ்ட் இந்தியா தான்.. உலகளவில் 2வது இடம்.. அப்போ முதல் இடம்..?!

அமெரிக்கா - சீனா இடையில் வர்த்தகப் பிரச்சனை இருந்த காலத்தில், சீனாவில் இருந்து வெளியேறும் உற்பத்தி நிறுவனங்களை இந்தியாவிற்கு ஈர்க்க வேண்டுமென்று மத்திய அரசும், மாநில அரசுகளும் பல தளர்வுகள் அளிக்கப்பட்டு, வெளிநாட்டு உற்பத்தி நிறுவனங்களைச் சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்றது.

இதன் வாயிலாக இன்று உற்பத்தி தொழிற்சாலை துவங்க வேண்டும் என்றாலே சர்வதேச நிறுவனங்களுக்கு இந்தியா தான் பெஸ்ட் சாய்ஸ் என்ற நிலையை அடைந்துள்ளது.

குஷ்மேன் அண்ட் வேக்பீல்டு அறிக்கை

குஷ்மேன் அண்ட் வேக்பீல்டு அறிக்கை

குஷ்மேன் அண்ட் வேக்பீல்டு வெளியிட்ட 2021ஆம் ஆண்டுச் சர்வதேச உற்பத்தி ஆபத்துக் குறியீட்டில் உலகளவில் உற்பத்தி தளம் அமைக்க அதிகம் வரும்பும் நாடுகள் பட்டியலில் இந்தியா 2வது இடத்தைப் பிடித்துள்ளது என்று அறிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா, அமெரிக்கா உட்பட வேகமாக வளர்ந்து வரும் தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் ஓரம்கட்டி 2வது இடத்தை அடைந்துள்ளது.

இந்தியாவிற்கு நன்மை

இந்தியாவிற்கு நன்மை

இந்தியாவில் ஆப்ரேட்டிங் கன்டிஷன் மற்றும் செலவுகளின் அளவீடுகள் ஆகியவற்றின் காரணமாக அதிகளவிலான வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படையெடுக்கிறது. இதற்கிடையில் இந்தியா நடப்பு ஆண்டில் அதிகளவிலான ஏற்றுமதி ஆர்டர்களைப் பெற்றுள்ளது. இதன் மூலம் குஷ்மேன் அண்ட் வேக்பீல்டு பட்டியலில் இந்தியா 2வது இடத்தைப் பிடித்துள்ளது.

அமெரிக்கா - இந்தியா

அமெரிக்கா - இந்தியா

கடந்த ஆண்டு இப்பட்டியலில் அமெரிக்கா 2வது இடத்திலும், இந்தியா 3வது இடத்திலும் இருந்தது. தற்போது இரு நாடுகளும் தத்தம் இடத்தை மாற்றிக்கொண்டு உள்ளது. இந்த உயர்வின் மூலம் முதல் இடத்தில் இருக்கும் சீனா-வை பிடிக்க இன்னமும் ஒரு இடம் மட்டுமே மீதும் உள்ளது. விரைவில் உற்பத்தியில் சிறந்து விளங்கும் நாடாக இந்தியா முன்னேறுமா..?

இந்திய பொருளாதாரம்

இந்திய பொருளாதாரம்

இந்தியா விவசாயப் பொருளாதார நாடாக இருந்து சேவை துறை சார்ந்த பொருளாதாரமாக மாறியது. தற்போது உற்பத்தி துறையினை கையில் எடுத்து உற்பத்தி துறை சார்ந்த நிறுவனமாக உருவெடுக்க உள்ளது. இதற்கு ஏற்றார் போல் இந்தியாவில் குறைந்த சம்பளத்தில் ஊழியர்கள் கிடைப்பது மட்டும் அல்லாமல் அனைத்து துறைக்கும் போதுமான திறன்வாய்ந்தவர்களும் இந்தியாவில் உள்ளது கூடுதல் பலம்.

கொரோனா தொற்றுக் காலம்

கொரோனா தொற்றுக் காலம்

கொரோனா தொற்று காலத்திலும் ஆண்டின் இறுதியிலும் இந்தியாவின் உற்பத்தி அளவில் பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் இல்லாமல் தப்பித்துக்கொண்டது. இது நாட்டின் உற்பத்தி திறனை காட்டுகிறது. இதேபோல் மேக் இன் இந்தியா மற்றும் உற்பத்தி துறை நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் புதிதாக வரும் நிறுவனங்களுக்குப் பெரிய உதவியாக அமைந்துள்ளது.

உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறை

உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறை

இதேபோல் இந்தியா உற்பத்தி துறை மற்றும் ஏற்றுமதி துறையில் வளர்ச்சி அடைந்து வரும் இந்தக் காலக்கட்டத்தில் நிலம், தொழிலாளர், உள்கட்டமைப்பில் ஆகிய 3 துறைகளிலும் பல மாற்றங்களையும், மேம்பாடுகளையும் செய்யத் துவங்கியுள்ளது இந்தியாவிற்குக் கூடுதல் பலத்தைச் சேர்க்கிறது. இந்தியா அடுத்தச் சில வருடத்தில் ஆசிய பசிபிக் சந்தையில் பெரும் சக்தியாக உருவெடுக்க உள்ளது.

தென் கொரியா லாபம்

தென் கொரியா லாபம்

மேலும் இந்தியா மட்டும் அல்லாமல் உலகளவில் மைக்ரோ பிராசசர், கம்பியூட்டர் சிப் மற்றும் பார்மா ஆகிய துறைகளில் அதிகளவிலான முதலீடுகள் தேவைப்படுகிறது. இந்த வகையில் சிப் உற்பத்தி துறையில் அதிகளவிலான முதலீட்டை தென் கொரியா பெற்று, இத்துறையில் புதிய ஆதிக்கத்தைச் செலுத்த துவங்கியுள்ளது. இனி வரும் காலக்கட்டத்தில் சிப் தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் தென் கொரியா அதிகளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்யும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+