2021ஆம் ஆண்டில் ஆசியாவிலேயே மேகமாக வளரும் நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் இருக்கும் என வெளிநாட்டு ஆராய்ச்சி மற்றும் தரகு நிறுவனமான நோமுரா தனது கணிப்புகளை வெளியிட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் கணிப்புகள் இன்று இந்திய சந்தையைப் பெரிய அளவில் பாதிக்கவில்லை என்றாலும் முதலீட்டாளர்களுக்கு இந்திய சந்தை மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது.
இந்திய பொருளாதாரம் ஜூன் காலாண்டில் -23.9 சதவீத சரிவில் இருந்து வேகமாக மீண்டு வருகிறது.
ஆசிய நாடுகள்
நோமுரா கணிப்பின் படி 2021ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 9.9 சதவீதம் வரையில் உயரும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
இதேநேரத்தில் ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் சீனா 2021ல் 9 சதவீதமாகவும், சிங்கப்பூர் 7.5 சதவீதமாகவும் வளர்ச்சி அடையும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இந்தியா, ஆசியாவிலேயே வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
2021ல் இந்தியா
நோமுரா நிறுவனத்தின் தலைமை இந்திய பொருளாதார வல்லுனர் மற்றும் நிர்வாக இயக்குனர் சோனல் வர்மா கூறுகையில், 2021ஆம் ஆண்டில் முதல் காலாண்டில் இந்திய பொருளாதாரம் -1.2 சதவீத அளவில் தான் வளர்ச்சி அடையும், ஆனால் 2வது காலாண்டில் 32.4 சதவீதமும், 3வது காலாண்டில் 10.2 சதவீதமும், 4வது காலாண்டில் 4.6 சதவீதம் என 2021ஆம் ஆண்டின் 4 காலாண்டுகளில் சராசரியாக இந்திய ஜிடிபி 9.9 சதவீதம் வளர்ச்சி அடையும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது எனத் தெரிவித்தார்.
2020 Vs 2021
2020ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் -7.1 சதவீதமாக இருக்கப்போகும் இந்திய பொருளாதாரம் 2020ல் 9.9 சதவீத வளர்ச்சியில் ஆசியாவிலேயே வேகமாக வளரும் நாடாக இந்தியா இருக்கும் என நோமுரா அமைப்பின் இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
குறிப்பாக 2021ல் 2வது காலாண்டில் ஏற்படப்போகும் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் எனத் தெரிவித்துள்ளது நோமுரா.
பிற நாடுகள்
2021ல் இந்தியா பொருளாதாரம் 9.9 சதவீதம் வளர்ச்சி அடையும் எனக் கணித்துள்ளது நோமுரா 2022ல் 5 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடையும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் 2021ல் பிற நாடுகளின் வளர்ச்சி குறித்தும் நோமுரா தனது கணிப்புகளை வெளியிட்டு உள்ளது. இதன் பிடி ஆஸ்திரேலியா 3.8%, சீனா 9%, ஹாங்காங் 4.3%, இந்தோனேசியா 4.9%, பிலிப்பைன்ஸ் 6.8%, சிங்கப்பூர் 7.5%, தென் கொரியா 3.6%, தாய்லாந்து 3.2% அளவில் வளர்ச்சி பதிவு செய்யும் எனக் கணித்துள்ளது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications