இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக அடுத்த 5 ஆண்டுகளில் வளர்ச்சி காணும். 2047 காலத்தில் அமெரிக்காவின் அளவுக்கு பொருளாதாரம் வளர்ச்சி காணும் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2047ம் ஆண்டளவில் இந்தியாவின் பொருளாதாரம் 35 - 40 ட்ரில்லியன் டாலர் எனும் அளவுக்கு பொருளாதார வளர்ச்சியினை எட்டும் என தெரிவித்துள்ளார்.
மகராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்த ஆசிய பொருளாதார கலந்துரையாடல் நிகழ்ச்சியில், பங்கேற்ற மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஸ் கோயல் இந்தியா பொருளாதாரம் குறித்த ஒரு முக்கிய அப்டேட்டினை கொடுத்துள்ளார்.
வேகமாக வளர்ந்து வரும் நாடு
இந்தியா 10வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. தற்போது சர்வதேச அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு நாடாக உள்ளது. இது இன்னும் இந்தியாவிடம் இளைஞர்களின் எண்ணிக்கை என்பது அதிகமாக உள்ளது. இது இந்திய பொருளாதாரத்திற்கு இது சாதகமான ஒரு விஷயமாக அமையலாம். இது மிகப்பெரிய பலமாகவும் அமையலாம்.
பெரும் தாக்கம்
வளர்ந்த நாடுகள் கூட இன்று ரஷ்யா - உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில், பெரும் சிக்கலை எதிர் கொண்டுள்ளன. உணவு பாதுகாப்பு, எரிபொருள், பணவீக்கம் ,வட்டி விகிதம் அதிகரிப்பு, வளர்ச்சியில் ஏற்படும் தாக்கங்கள், வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இரண்டிலுமே பெரிய விளைவை ஏற்படுத்தியுள்ளது.
தடையற்ற வர்த்தக ஓப்பந்தம்
இந்தியா அரபு அமீரகம் இடையேயான தடையற்ற வர்த்தக ஓப்பந்தம் விரைவில் கையொப்பமானது. அதேபோல ஆஸ்திரேலியாவுடனும் குறுகிய கால பேச்சு வார்த்தையில் விரைவான முறையில் பல ஒப்பந்தம் கையெப்பமானது. இஸ்ரேல், கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் ஐரோப்பிய யூனியனுடனும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்தும் பேச்சு வார்தை நடத்தி வருகின்றது. இது மேற்கொண்டு பாதுகாப்பானதாக அமையலாம். இந்தியாவின் வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம்.
பொறுப்பான முறையில் கவனம்
பருவ நிலை மற்றத்தை அரசு பொறுப்பான முறையில் கவனம் செலுத்தி வருகின்றது. கழிவுகளை மறுசுழற்சி செய்யும் வகையில் சுழற்சி பொருளாதாரத்தினை அரசு ஊக்கப்படுத்தியுள்ளது. பருவ நிலை மாற்ற இலக்குகளை அடைவதில் முன்னணியில் உள்ள 5 நாடுகளில் இந்தியா ஒன்றாக உள்ளது.
வளர்ச்சி அதிகரிக்கலாம்
உலக பொருளாதாரத்துக்கு குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும். எனவே குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் பெண் தொழில் முனைவோருக்கும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. மொத்தத்தில் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு சீர்திருத்தங்களை அரசு மேற்கொண்டுள்ளது. இது நீண்டகால நோக்கில் பொருளாதார வளர்ச்சிக்கு கைகொடுக்கலாம்.


Click it and Unblock the Notifications