டெல்லி : இந்தியா புல்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் தொடர்ந்து தனது சொத்துகளை விற்று கடனை அடைத்து வருகிறது. ஏற்கனவே இது, இந்திய வர்த்தகத்தில் உள்ள கடனை அடைத்து, நிறுவனத்தை மேம்படுத்துவதற்காகத் தான் இப்படியொரு நடவடிக்கையை எடுத்து வருவதாகவும் கூறியிருந்தது.
இந்த நிலையில் ரியல் எஸ்டேட் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியா புல்ஸ் நிறுவனம், மும்பை குருகிராமில் உள்ள தனது வணிகத் திட்டங்களை, உலகளாவிய முதலீட்டு நிறுவனமான பிளாக்ஸ்டோனுக்கு 811 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாபுல்ஸ் ரியல் எஸ்டேட் லிமிடெட் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள், உலகளாவிய புகழ் பெற்ற பிளாக்ஸ்டோன் கட்டுப்பாட்டில் நிறுவனங்களுடன் உறுதியான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
சொத்து விற்பனை
இந்தியா புல்ஸ் ரியல் எஸ்டேட் டிசம்பர் 31,2019-க்குள் இந்த நிறுவனம் தனது சொத்துகளின் விற்பனை நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது. மும்பையில் உள்ள தனது வணிக சொத்துகளை விற்பனை செய்வதன் மூலம் இந்த நிறுவனம், தனது துணை நிறுவனத்தால் 675 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தில் மறுமுதலீடு செய்யப்போவதாகவும் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடன் இல்லா நிறுவனம்
இந்தியா புல்ஸ் நிறுவனத்தின் விற்பனை சரிவு, விற்பனையைத் தொடர்ந்து நிறுவனத்தின் பங்குதாரர் வடிவத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிறுவனம் நடப்பு நிதியாண்டின் இறுதியில் கடன் இல்லாத நிறுவனமாக மாறுவதற்கான இந்தியாபுல்ஸ் இப்படி ஒரு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளது.
14% பங்கு விற்பனை
கடந்த செப்டம்பர் 30, 2017 நிலவரப்படி இந்த நிறுவனத்தின் கடன் அளவு 1,783 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. ஆக நடப்பு நிதியாண்டில் கடன் இல்லா நிறுவனமாக மாற்ற இந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக கடந்த ஜூன் மாதத்தில் இந்த நிறுவனம் தனது மொத்த பங்கில் 14 சதவிகிதம் பங்குகளை 950 கோடி ரூபாய்க்கு எம்பஸி குழுமத்துக்கு விற்றது குறிப்பிடத்தக்கது.
லண்டனிலும் விற்பனை
கடந்த செப்டம்பர் மாதத்திலேயே இந்த நிறுவனம், தனது நேரடி அல்லது மறைமுக பங்குகளை விலக்குவதற்கு ஒப்புதல் அளித்ததாக கூறப்பட்டது. இப்படி ஒரு நிலையில் தான் லண்டன் சொத்தினை கையகப்படுத்த புரோமோட்டர்கள் முன் வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த வங்கித் துறையில் நுழைய இந்தியா புல்ஸ் தனது பல்வேறு சொத்துகளை தனியார் பங்கு நிறுவனமான பிளாக்ஸ்டோன் நிறுவனத்துக்கு தொடர்ந்து விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இணைப்பு நடவடிக்கை நிராகரிப்பு
இந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் தனியார் துறையை சேர்ந்த இந்தியா புல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸைம், லட்சுமி விலாஸ் வங்கியுடன் இணைக்க ரிசர்வ் வங்கி மறுத்தது. இந்த நிலையில் இந்த நிறுவனம் லட்சுமி விலாஸ் வங்கியுடன் இணையுமா? அல்லது இந்த சொத்தை விற்பனை மூலம் ஏற்கனவே உள்ள வர்த்தகத்தை இன்னும் விரிவுபடுத்துமா? என்பதை பொறுத்திறுந்து தான் பார்க்க வேண்டும்.
பங்கு விலை என்ன?
இந்த நிலையில் இந்த இந்தியாபுல்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பங்கு விலையானது 2 சதவிகிதம் அதிகரித்து 60 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இதே இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலை 4 சதவிகிதம் அதிகரித்து 307 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications