IndiaFirst Life Insurance நிறுவனம் ஐபிஓ மூலம் நிதி திரட்ட, பங்குசந்தை கட்டுப்பாட்டாளர் அமைப்பான செபி-யிடம் இருந்து ஒப்புதல் பெற்றுள்ளது.
அக்டோபர் 27 அன்று IndiaFirst Life Insurance நிறுவனத்தின் ஆரம்ப IPO ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், மார்ச் 15 அன்று இந்த ஐபிஓ ஆவணங்களை ஆய்வு செய்து இந்நிறுவனம் ஐபிஓ வெளியிட ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாக சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
IndiaFirst Life Insurance நிறுவனத்தின் ஐபிஓ-வில் 500 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியை புதிய பங்குகள் வெளியீடு மற்றும் 14.1 கோடி வரையிலான ஈக்விட்டி பங்குகளை ஆஃபர் பார் சேல் மூலம் விற்பனைக்கு வழங்குகிறது என DRHP அறிக்கையில் தெரிவித்துள்ளது.
IndiaFirst Life Insurance நிறுவனம்
இந்த பங்குசந்தை முதலீட்டு சூழ்நிலை மோசமாக இருக்கும் வேளையில் பல முன்னணி நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடுவதை ஒத்திவைத்துள்ளது. இந்த நிலையில் IndiaFirst Life Insurance நிறுவனம் ஐபிஓ மூலம் நிதி திரட்ட, பங்குசந்தை கட்டுப்பாட்டாளர் அமைப்பான செபி-யிடம் இருந்து ஒப்புதல் பெற்றுள்ளது.
ஐபிஓ
IndiaFirst Life Insurance நிறுவனத்தின் ஐபிஓ-வில் பாங்க் ஆஃப் பரோடா சுமார் 8.9 கோடி ஈக்விட்டி பங்குகளையும், கார்மல் பாயின்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் 3.9 கோடி ஈக்விட்டி பங்குகளை ஆஃப்லோட் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீதமுள்ள 1.3 கோடி ஈக்விட்டி பங்குகளை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆஃப்லோடு செய்ய உள்ளது.
4வது தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனம்
IndiaFirst Life Insurance நிறுவனத்தின் ஐபிஓ மூலம் இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டவுடன், இந்தியாவில் பட்டியலிடப்பட்ட நான்காவது தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக இருக்கும்.
பிரைவேட் ப்ளேஸ்மென்ட்
வணிக வங்கியாளர்களுடன் கலந்தாலோசித்து IndiaFirst Life Insurance நிறுவனம் சுமார் 100 கோடி ரூபாய் வரையிலான பங்குகளை பிரைவேட் ப்ளேஸ்மென்ட் பிரிவில் வைக்கிறது. இதன் மூலம் பொது சந்தையில் வரும் பங்குகளின் அளவு பெரிய அளவில் குறைய வாய்ப்பு உள்ளது.
500 கோடி ரூபாய் வருமானம்
IndiaFirst Life Insurance நிறுவனம் இந்த ஐபிஓ மூலம் கிடைக்கும் ரூ. 500 கோடி வருமானத்தை பங்குச்சந்தைக்கு சமர்ப்பித்த அறிக்கையின் படி காப்பீட்டாளரின் கடன் அளிக்கும் நிலையை மேம்படுத்தவும், மூலதனத் தளத்தை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
வங்கி காப்பீட்டு நெட்வொர்க்
IndiaFirst Life Insurance நிறுவனம் தற்போது இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளான பாங்க் ஆப் பரோடா மற்றும் யூனியன் பேங்க் ஆகியவற்றால் வழங்கப்படும் விரிவான வங்கி காப்பீட்டு நெட்வொர்க்-ன் ஆதரவு மூலம் இயங்கி வருகிறது.
புக் ரன்னர்ஸ்
இந்த ஐபிஓ-வுக்கு ICICI Securities, Ambit, BNP Paribas, BOB Capital Markets, HSBC Securities and Capital Markets, Jefferies India மற்றும் JM Financial ஆகியவை புக் ரன்னர்ஸ் ஆக இயங்க உள்ளது. மேலும் எப்போது ஐபிஐ வெளியிடும் என்பது குறித்து இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications