பிரைவேட் ஜெட் வாங்குவது இப்போ ரொம்ப ஈசி.. அதுவும் பட்ஜெட் விலையில்..!

சாமானிய மக்களுக்கு எப்படி ஒரு கார் வாங்குவது சாதனையாகவும், பெரிய வெற்றியாகவும் பார்க்கப்படுகிறதோ.. இதேபோல் மில்லியனர்கள் அதாவது 100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துகளை வைத்துள்ளவர்களுக்கு பிரைவேட் ஜெட் வாங்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.

இந்த ஆசையை எளிதாக்குகிறது ஒரு நிறுவனம், இந்தியாவில் பல சேவைகளை எளிதாக தற்போது கிடைப்பது போல் பிரைவேட் ஜெட்-ஐ சொந்தமாக்குவதும் தற்போது ஈசியாகியுள்ளது எப்படி.

பிரைவேட் ஜெட் வாங்குவது இப்போ ரொம்ப ஈசி.. அதுவும் பட்ஜெட் விலையில்..!

இந்திய விமான சேவையில் புரட்சியை செய்த ஏர் டெக்கான் நிறுவனத்தின் முன்னால் வருவாய் பிரிவு தலைவரும், மார்கெட்டிங் பிரிவின் தலைவருமான ஜான் குருவில்லா Indiajets என்னும் நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.

இந்தியாவில் விமான போக்குவரத்து சந்தை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் OTT தளத்திற்கு சப்ஸ்கிரிப்ஷன் செய்வது போது பிரைவேட் ஜெட்-க்கு சப்ஸ்கிரிப்ஷன் மாடல் கொண்ட வர்த்தகத்தை இந்தியாஜெட்ஸ் நிறுவனத்தின் மூலம் அறிமுகம் செய்துள்ளார்.

இந்தியாவில் முதல் முறையாக சப்ஸ்கிரிப்ஷன் அடிப்படையிலான ஏவியேஷன் சேவை அளிக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனமாக உருவாகியுள்ளது IndiaJets. இந்த நிறுவனம் ஒரு நிறுவனத்தின் உரிமையாளர், CXO பிரிவில் இருக்கும் அதிகாரிகளுக்கு பிரைவேட் ஜெட்-ஐ ஒரு பகுதியை சொந்தமாக்கும் வாய்ப்பை கொடுக்கிறது.

பிரைவேட் ஜெட் வாங்குவது இப்போ ரொம்ப ஈசி.. அதுவும் பட்ஜெட் விலையில்..!

பொதுவாக சொந்தமாக ஒரு பிரைவேட் ஜெட் வாங்க வேண்டுமெனில் பல நூறு கோடியை செலவிட வேண்டும், அதுமட்டும் அல்லாமல் பாதுகாப்பு, பைலட், சரிவீஸ், எரிபொருள், நிர்வாகம் என பல செலவுகள் உள்ளது.

இதையெல்லாம் IndiaJets ஏற்றுக்கொண்டு மாத அடிப்படையிலும், சில மணிநேர அடிப்படையிலும் வருடாந்திர அளவில் சப்ஸ்கிரிப்ஷன் சேவை அளிக்கிறது. இதனால் வேண்டிய நேரத்தில் வேண்டி இடத்தில் சப்ஸ்கிரிப்ஷன் பெற்ற காலத்தில் பிரைவேட் ஜெட் விமானத்தை பெற முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+