அரிய வகையான கரன்சி நோட்டுகள் மற்றும் நாணயங்கள் சேகரிக்கும் நபர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், பெரும் தொகையைச் சம்பாதிக்க ஒரு முக்கியமான வாய்ப்பு உருவாகியுள்ளது.
ஒரு கரன்சி நோட்டு அல்லது நாணயம் அரிய வகை எனத் தரம் பிரிக்க ஏதேனும் தனித்துவமான வரிசை எண்கள், அவற்றில் அச்சிடப்பட்ட படங்கள், கையெழுத்து, முக்கியமான காலகட்டத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களுக்கு அதன் அசல் மதிப்பை விடவும் அதிக மதிப்பு கிடைக்கும்.
இந்த வகையில் தற்போது மோடி அரசால் தடை செய்யப்பட்ட 1000 ரூபாய் நோட்டுக்கு தற்போது பிரிட்டன் நாட்டில் மிகப்பெரிய டிமாண்டு உருவாகியுள்ளது மட்டும் அல்லாமல் மிகப்பெரிய தொகைக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
பிரிட்டன்
பிரிட்டன் நாட்டில் சமீபத்தில் இதுபோன்ற ஒரு கரன்சி நோட்டு நெட்டிசன் மத்தியில் அதிகப்படியான கவனத்தை ஈர்த்தது. இந்தியாவில் செல்லாது என அறிவிக்கப்பட்ட 1000 ரூபாய் நோட்டு ஒரு குறிப்பிட்ட வரிசை எண் கொண்டு இருந்தால் அதை 3.5 லட்சம் ரூபாய்க்கு வாங்க பலரும் தயாராக இருப்பதாக வந்த செய்தி சமுக வலைத்தளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
1000 ரூபாய் நோட்டு
அப்படி ஒரு நோட்டு உங்களிடம் இருந்தால், லண்டனுக்குச் சென்று அதைக் கொத்து பெரும் தொகையைச் சம்பாதிக்க முடியும். அப்படி இந்த 1000 ரூபாய் நோட்டில் என்னதான்டா ஸ்பெஷல்..?
AH17 75 வரிசை எண்
இந்தக் குறிப்பிட்ட இந்திய 1000 ரூபாய் நோட்டு AH17 75 என்ற வரிசை எண் கொண்ட ரூபாய் நோட்டை யாராவது வைத்திருந்தால், அதற்கு 3.5 லட்சம் ரூபாய் விற்பனை செய்ய முடியும் என அந்நாட்டின் டெய்லிஸ்டார் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
தனித்துவம்
இந்த 1000 ரூபாய் நோட்டில் அதன் வரிசை எண் மட்டுமே அதன் தனித்துவம். ஒரு குறிப்பிட்ட வரிசையில் தோன்றும் இந்த இலக்கங்கள் கொண்ட ரூபாய் நோட்டுக்குத் தற்போது பிரிட்டன் நாட்டில் டிமாண்ட் அதிகரித்துள்ளது.
ஜேன் ஆஸ்டன்
AH 17 75 என்ற எண்ணானது பிரபல ஆங்கில எழுத்தாளர் ஜேன் ஆஸ்டனின் பிறந்த மற்றும் இறந்த தேதியைக் குறிப்பிடுவதால் இந்தச் சீரியல் எண் கொண்ட ரூபாய் நோட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
ஜேன் ஆஸ்டன் பிறந்த நாள்
ஆங்கில எழுத்தாளர் ஜேன் ஆஸ்டன் எழுத்துத் துறையில் மிகவும் பிரபலமானவர் என்பது மட்டும் அல்லாமல் இவருடைய 6 நாவல்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை. Jane Austen 1775 இல் பிறந்தார், 1817 இல் இறந்தார்.
3.5 லட்சம் ரூபாய்
இதனால் AH17 75 வரிசை எண் கொண்ட 1000 ரூபாய் நோட்டுக்கு பெரும் டிமாண்ட் உள்ளது. இந்த ரூபாய் நோட்டுத் தற்போது 3.5 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து எழுத்தாளர் Jane Austen ரசிகர்கள் வாங்க தயாராக உள்ளனர்.
ஒரு ரூபாய் நாணயம்
சமீபத்தில் 1885 ஆம் ஆண்டுப் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அச்சிடப்பட்ட ஒரு ரூபாய் நாணயம் சமீபத்தில் 10 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இதுபோன்ற அரிய நாணயங்களை indiamart தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பல நேரத்தில் அரிய நாணயங்கள் என்ற பெயரில் பல மோசடிகள் நடக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications