இந்திய விமானப்படைக்கு 97 தேஜாஸ் இலகுரக போர் விமானங்களை வாங்குவதற்காக, இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்துடன் ரூ.62,370 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்தது. இவற்றில் 68 போர் விமானங்களும், 29 இரட்டை இருக்கை விமானங்களும் அடங்கும்.
இந்த தேஜாஸ் ஜெட் விமானங்களை இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம் 2027-2028 நிதியாண்டு முதல் விமானப்படையிடம் ஒப்படைக்க தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "UTTAM AESA Radar, Swayam Raksha Kavach போன்ற நவீன அம்சங்களை கொண்ட LCA Mk1A விமானங்களாக இவை இருக்கும் என்றும் இதில் 64% க்கும் அதிகமான உள்நாட்டு பாகங்கள் பயன்படுத்தப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த திட்டத்தில் 67 புதிய உள்நாட்டுப் பொருட்கள் இடம் பெற்றுள்ளன. 105 சப்ளையர்களின் ஆதரவுடன், இந்த திட்டம் ஆறு ஆண்டுகளில் ஆண்டுக்கு 11,750 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய விமானப்படையின் திறனை மேம்படுத்துவதோடு, 'ஆத்மநிர்பர் பாரத்' மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு தயார்நிலை ஆகிய இரண்டுக்கும் வலு சேர்க்கும்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு, இந்த மிகப்பெரிய கொள்முதலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே ஒப்புதல் அளித்திருந்தது. அரசுக்கு சொந்தமான இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்படும் இரண்டாவது பெரிய ஒப்பந்தம் இதுவாகும்.’
முன்னதாக, 2021 இல், இந்திய விமானப்படைக்காக 83 தேஜாஸ் MK-1A ஜெட் விமானங்களை வாங்குவதற்காக HAL உடன் ரூ. 48,000 கோடி ஒப்பந்தத்தை பாதுகாப்பு அமைச்சகம் மேற்கொண்டது. இந்த ஒற்றை எஞ்சின் கொண்ட Mk-1A ஜெட் விமானங்கள், 62 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றிய MiG-21 போர் விமானங்களுக்கு மாற்றாக அமையும்.
செப்டம்பர் 26 அன்று ஓய்வுபெற உள்ள MiG-21 விமானங்களுக்குப் பதிலாக, தேஜாஸ் விமானம் ஒரு பல்துறை போர் விமானமாகும். இது உயர் அச்சுறுத்தல் நிறைந்த வான் சூழல்களிலும் செயல்படும் திறன் கொண்டது. வான் பாதுகாப்பு, கடல்சார் கண்காணிப்பு மற்றும் தாக்குதல் போன்ற பல பணிகளை மேற்கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படையின் போர் படைப்பிரிவுகளின் எண்ணிக்கை 42 என்ற அதிகாரப்பூர்வ பலத்தில் இருந்து 31 ஆக குறைந்துள்ளதால், புதிய போர் விமானங்களைச் சேர்ப்பதில் IAF ஆர்வம் காட்டி வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான அரசினை பொறுத்தவரை பாதுகாப்பு துறைக்கான பொருட்களை இந்தியாவிலேயே தயாரித்து பயன்படுத்துவதில் முக்கியத்துவம் தருகிறது.
அந்த வகையில் தேஜாஸ் விமானத்தில் பெரும்பாலான பாகனங்கள் உள்நாட்டு தயாரிப்பாக இருக்கும், இது இந்திய பாதுகாப்பு துறை உற்பத்தியை அதிகரிப்பதோடு ஏற்றுமதிக்கான வாய்ப்புகளையும் இந்நிறுவனங்களுக்கு உண்டாக்கி தருகிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications