சிவில் ஏபியேஷன் அமைச்சகம் சமீபத்தில் ஹேண்ட் பேக்குகளை எடுத்துச் செல்வதற்கான முக்கிய விதிகளை வகுத்துள்ளது. இதனால் விமானங்களில் பயணிக்கும் பயணிகள் சில விதிகளைப் பின்பற்ற வேண்டும். இந்த விதிகள் சர்வதேச விமானங்கள் மற்றும் உள்நாட்டு விமானங்களுக்கும் பொருந்தும் என்று கூறப்படுகிறது. சுமுகமான பயணத்திற்கு நடைமுறைப்படுத்தப்பட்ட விதிகள் குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
திருத்தப்பட்ட விதிகள் என்னென்ன?: விமானத்தில் பயணிக்கும் பயணிகள் ஏறுவதற்கு முன்பு ஏதேனும் கூடுதல் பொருட்கள் இருக்கிறதா என்பதை சரி பார்க்க வேண்டும். எக்கனாமி அல்லது பிரிமியம் கிளாஸில் பயணிக்கும் பயணிகள் அதிகபட்சமாக 7 கிலோ எடையுள்ள ஹேண்ட் பேக்குகளை எடுத்துச் சொல்லலாம். ஏர் இந்தியாவின் அறிக்கையின் படி பிசினஸ் கிளாஸில் பயணிக்கும் பயணிகள் அதிகபட்சமாக 10 கிலோ வரை எடுத்துச் செல்லலாம்.

புதிய விதிகளின் படி ஒரு ஹேண்ட்பேக்கின் நீளம் அகலம் ஆகியவற்றையும் சரிபார்க்க வேண்டும். ஹேண்ட் பேக்கின் உயரம் 15.7 அங்குலம் நீளம் மற்றும் 7.8 அங்குலம் அகலம் இருக்கலாம்.
விலக்குகள்: 2024-ஆம் ஆண்டின் மே 4-ஆம் தேதிக்கு முன் விமான டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு இந்த ஹேண்ட்பேக் வழிகாட்டுதல்கள் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பயணிகளுக்கு இந்த புதிய வழிகாட்டுதல்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எகனாமி கிலாஸில் 8 கிலோவும், பிரீமியம் எக்கானமி கிளாஸில் 10 கிலோவும், ஃபர்ஸ்ட் அல்லது பிசினஸ் கிளாஸில் 12 கிலோவும் எடுத்துச் செல்லலாம்.
கடந்த சில மாதங்களில் விமான பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. 2024 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் இந்திய விமானங்கள் உள்நாட்டு வழித்தடங்களில் ஏறக்குறைய 1.42 கோடி பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளன. இது 2023-ஆம் ஆண்டின் இதே காலக்கோட்டத்தோடு ஒப்பிடுகையில் சுமார் 12 சதவீத அதிகரிப்பாகும்.
சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி 2024-ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நவம்பர் வரையிலான மாதங்களில் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 1,464.02 லட்சமாக இருந்தது. இந்த எண்ணிக்கை 2023-ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நவம்பர் வரையிலான மாதங்களில் 1,382.34 லட்சமாக இருந்தது. இது சுமார் 5.91 சதவீத அதிகரிப்பாகும். சுமூகமான பயணத்தை உறுதி செய்வதற்கு பயணிகள் இது போன்ற புதிய விதிகள் குறித்து தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications