டெல்லி: ஆஸ்திரியாவுக்கான இந்திய தூதர் ரேணு பால், அங்கு 15 லட்சம் ரூபாய் மாத வாடகைக்கு ஒரு வீட்டில் தங்கி வந்துள்ளார்.
மேலும் ரேணு பால் அரசின் நிதியை முறைகேடாகவும், தவறாகவும் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் இந்தியாவுக்கு திரும்ப அழைக்கப்பட்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையை மத்திய வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ரேணு பால் 1988-ம் ஆண்டின் இந்திய வெளியுறவு சேவை துறையை சேர்ந்த IFS அதிகாரியாவார். ஆஸ்திரியாவில் அவருடைய பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவு பெறுவதாக இருந்தது.
அதிக செலவு
இந்த நிலையில் அவர் மீது எழுந்த புகாரின் பேரில், மத்திய கண்காணிப்பு குழுவான CVC மற்றும் வெளியுறவு அமைச்சகம் ஆகியவை விசாரணையை நடத்தியது. இந்த விசாரணையில் ரேணு பால், வீட்டு வாடகைக்காக மட்டும் மத்திய அரசின் அனுமதியின்றி கணக்கில் இல்லாத அளவுக்கு பணத்தை செலவு செய்தது தெரிய வந்துள்ளது.
பல விஷயங்களில் மோசடி
மேலும் வெளியுறவுத் துறையில் பணியாற்றிய ரேணு, VAT வரி திரும்ப பெறுதலில் மோசடி செய்ததாகவும், உண்மைக்கு புறம்பான தகவல்களை பல இடங்களில் அளித்திருந்ததாகவும் விசாரணை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
முதல் கட்ட அறிக்கை சமர்பிப்பு
மேலும் கடந்த செப்டம்பர் மாதத்தின் போது ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவுக்கு வெளியுறவு அமைச்சகத்தின் தலைமை கண்காணிப்பு அதிகாரி தலைமையில் குழு ஒன்று சென்றது. அவர்கள் அச்சமயத்தில் ரேணு பாலிடம் விசாரணை நடத்தினர். இப்படி ஒரு நிலையில் தான் விசாரணைக்குழு தரப்பிலிருந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியா திரும்ப உத்தரவு
இதில் முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில் விதிகளை மீறி நிதி மோசடி, நிதியை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட பல குற்றச் செயல்களில் ரேணு பால் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான், ரேணு பால் டெல்லிக்கு திரும்புமாறு மத்திய வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், நிர்வாக ரீதியாகவும் சரி, நிதி தொடர்பாகவும் எந்தவொரு உத்தரவை பிறப்பிக்க அவருக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையிலேயே தற்போது ரேணு பால் இந்தியா திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications