உலக வங்கியின் தற்போதைய தலைவர் டேவிட் மல்பாஸ் விரைவில் பதவி விலகுவதாக அறிவித்ததை அடுத்து இந்த முக்கியமான பதவியில் யாரை நியமிப்பது என்பதில் பெரும் குழப்பத்தைத் தாண்டி, சர்வதேச பொருளாதாரம் ரெசிஷனை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கும் வேளையில் உலகி வங்கியின் புதிய தலைவர் மிகவும் திறமையானவராகவும், அனைத்து சந்தைகளிலும் அனுபவம் மிக்கவராகவும் இருக்க வேண்டியது அவசியமாக உள்ளது.
இந்த நிலையில் உலகளவில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு சேவை அளிக்கும் மாபெரும் மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும், இந்திய அமெரிக்கரான அஜய் பங்கா-வை உலக வங்கியை வழிநடத்த அமெரிக்க அரசு பரிந்துரைப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் வியாழக்கிழமை தெரிவித்து உள்ளார்.
அமெரிக்க டெக் துறையை மட்டும் அல்லாமல் உலக வங்கியும் இந்தியர்கள் கையில் வர போகிறது. இதன் மூலம் அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்கள் அந்நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை எளிதாகப் புரிந்துக்கொள்ள முடிகிறது.
உலக வங்கி
உலக வங்கி தனது புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்பதற்காக உலக நாடுகள், நிதி அமைப்புகள், முதலீட்டு நிறுவனங்கள் எனப் பல தரப்பினர் 'இவரை; நியமிக்கலாம் எனப் பிரிந்துறைகளை அளிக்கத் துவங்கியுள்ளது. உலக வங்கி நிர்வாகம் மார்ச் 29 ஆம் தேதி வரையில் வேட்பாளர் நியமனங்களை ஏற்கும். ஆனால் உலக வங்கி பெண் வேட்பாளர்கள் "வலுவாக" ஊக்குவிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐஎம்எப்
2022 ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஐஎம்எப் அமைப்பு இந்திய அமெரிக்கரான கீதா கோபிநாத்-ஐ இந்த அமைப்பின் முதல் துணை நிர்வாகத் தலைவராக நியமித்தது. ஐஎம்எப் அமைப்பில் முதல் துணை நிர்வாகத் தலைவர் என்பது இவ்வமைப்பில் டாப் 2வது பதவி.
அஜய் பங்கா
பொதுவாக உலக வங்கியின் தலைவர் அமெரிக்கராகவும், சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் ஐரோப்பியரை நியமிப்பது தான் வழக்கம். ஆனால் இந்த முறை இந்திய அமெரிக்கரான அஜய் பங்கா-வை உலக வங்கியை வழிநடத்த அமெரிக்க அரசு பரிந்துரைப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது வியப்பு அளிக்கிறது. இதேபோல் அஜய் பங்கா இந்தியாவில் பிறந்தாலும் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர் மட்டும் அல்லாமல் பராக் ஓபாமா இவரை அதிபர் ஆலோசனை குழுவில் நியமிக்கப்பட்டார்.
ஜெனரல் அட்லாண்டிக்
இந்திய-அமெரிக்கரான அஜய் பங்கா-விற்குத் தற்போது 63 வயதாகிறது. மாஸ்டர்கார்டு நிறுவனத்தை விட்டு மொத்தமாக வெளியேறிய நிலையில் தற்போது உலகின் முன்னணி முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான ஜெனரல் அட்லாண்டிக் என்ற ஈக்விட்டி முதலீட்டு நிறுவனத்தில் துணைத் தலைவராகப் பணியாற்றுகிறார்.
ஜோ பைடன் பரிந்துரை
அஜய் பங்கா காலநிலை மாற்றம் உட்பட நமது காலத்தின் மிக அவசரமான சவால்களைச் சமாளிக்கப் பொது-தனியார் வளங்களைத் திரட்டி செயல்படுவதில் அகிகப்படியான அனுபவம் கொண்டவர் என்று ஜோ பைடன் தனது அறிக்கையில் இவரைப்பற்றிக் குறிப்பிட்டு இருந்தார்.
டேவிட் மால்பாஸ்
கடந்த வாரம் தற்போதைய உலக வங்கித் தலைவரான டேவிட் மால்பாஸ் தனது பதவி காலம் முடிவதற்குக் கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்னதாகவே பதவி விலகுவதாகக் கூறினார். இந்த முடிவை உலக வங்கி தலைவர் காலநிலை நிலைப்பாடு குறித்த கேள்விகளால் பதவிக்காலம் முடிவுக்கு முன்னரே பதவி விலக உள்ளதாகத் தெரிகிறது.
அஜய் பங்கா - ஜோ பைடன்
உலக வங்கித் தலைவரான டேவிட் மால்பாஸ்-ஐ டொனால்ட் டிரம்ப் 2019 இல் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டார். இந்த வகையில் தற்போது அஜய் பங்கா-வை ஜோ பைடன் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதால் இவர் நியமிக்கப்பட அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. உலக வங்கித் தலைவரான டேவிட் மால்பாஸ்-ன் பதவிக்காலம் முதலில் 2024 இல் முடிவடைந்திருக்கும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications