2022 ஆம் ஆண்டு முதலே உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்று மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் பிரச்சனைகளைத் தொடர்ந்து பொருளாதார மந்தநிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இதில் அமெரிக்க போன்ற பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளும் தப்பிக்கவிலை என்பது தான் உண்மை. இதன் எதிரொலியாக தான் பல ஐடி நிறுவனங்கள் அவர்களின் நிறுவனத்தில் ஆட்குறைப்புப் பணியைத் தொடங்கியது, அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக மாறியது.
இந்த நிலையில் கூகுள் நிறுவனம் என்ஆர்ஐ ஊழியருக்கு இரவு 2 மணிக்கு பணிநீக்கம் குறித்த செய்தியை வெளியிட்டு அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இது Layoff காலம்!
2022 ஆம் ஆண்டு இறுதியில் இருந்தே ஐடி நிறுவனங்கள் முதல் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் வரை ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தொடங்கின. அதில் ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட், அமேசான், ட்விட்டர் பல்வேறு நிறுவனங்களும் பொருளாதார மந்தநிலை அச்சம் காரணமாக அதன் ஊழியர்களை கொத்து கொத்தாக பணிநீக்கம் செய்துள்ளது.
கூகுள் நிறுவன
அதிலும் குறிப்பாக உலகின் மிகப்பெரும் ஐடி ஜாம்பவான் நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் அதிரடியாக ஜனவரி மாதம் அதன் 12,000 ஊழியர்களை இரவோடு இரவாக பணிநீக்கம் செய்து, அந்நிறுவன ஊழியர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
நள்ளிரவில் பணிநீக்கம்!
இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தின் மென்பொருள் பொறியாளரான விஷால் அரோரா, அவரின் Layoff நிகழ்வைக் குறித்து அவரின் கதையை LinkdIn பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவில், அவருக்கு நள்ளிரவு 2 மணியளவில் கூகுள் நிறுவனத்திடம் இருந்து அவரின் மின்னஞ்சலுக்கு "உங்கள் வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு" என்ற சப்ஜெக்ட் உடன் மின்னஞ்சல் வந்ததாக கூறியுள்ளார்.
அதிர்ச்சி செய்தி
முதலில் அவர் அதை ஸ்பேம் (Spam) மெயில் என நினைத்து அப்படியே ஓரங்கட்டியதாகவும், காலை 7 மணிக்கு அவருக்கு வழக்கமாக ஆரம்பிக்கும் குழு சார்ந்த தொலைபேசி அழைப்புகளைப் பார்க்க அவரின் ஐடி- இல் லாக்-இன் செய்ய முயன்றபோது, கடவுச் சொல் இனி வேலை செய்யாது என வந்ததாகவும் கூறினார்.
லேப்டாப் முடக்கம்
மேலும் இனி இந்த நிறுவனத்தில் கார்ப்பரேட் லேப்டாப்பில் உள்நுழைய முடியாது எனவும், மேலும் உங்கள் வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களுக்கு உங்கள் மின்னஞ்சலைப் பார்க்கவும் என திரையில் வந்துள்ளது.
அதனையடுத்தே அவர் புறக்கணித்த மின்னஞ்சலை ஓபன் செய்து படித்தததாகவும், அப்பொழுது இதெல்லாம் உண்மையா இல்லை பொய்யா எனத் தெரியாமல் அவர் குழம்பியுள்ளார்.
Xooglers!
மேலும் கூகுள் நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட 12,000 பேரும் Xooglers என்றும் , அவர்கள் யாரும் தனியாக இல்லை என்று, பணிநீக்க செய்திற்குப் பிறகு தனக்கு ஆறுதல் வார்த்தைகளைச் சொன்ன அனைவருக்கும் நன்றி எனவும் விஷால் அரோரா LinkdIn பக்கத்தில் அவரின் கதையை வெளியிட்டுள்ளார்.
கர்பணிப்பெண் பணிநீக்கம்!
இந்த பணிநீக்க வரிசையில் கர்ப்பக்கால விடுப்பு எடுக்க கர்ப்பிணி பெண் ஒருவரையும் கூகுள் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. கூகுள் நிறுவனத்தில் ப்ரோக்ராம் மேனேஜராக பணிபுரியும் கேத்தரின் வோங் 8 மாத கர்ப்பிணி ஆவார். இவர் சமீபத்தில் வந்த பாசிட்டிவ் ரிவியூவுக்கு பிறகும் தன்னை ஏன் பணிநீக்கம் செய்தார்கள் என்பது எனக்கு புரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
முழுப்பொறுப்பை ஏற்ற சுந்தர்பிச்சை!
கூகுள் நிறுவனத்தின் ஆட்குறைப்பு செய்த எடுத்த முடிவிற்கு முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாகவும் அதன் தலைமைச் செயல் அதிகாரியான (CEO) சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications