அமெரிக்காவில் அதிபர் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில், இந்தியர்கள் கெத்து காட்டி வருகிறார்கள். இந்த தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிபர் வேட்பாளர்கள் மத்தியில் டொனால்ட் டிரம்ப் மற்றும் கமல் ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. கடந்த 2 வாரங்களாக வெளியான கணிப்புகள் அனைத்தும் இருவருக்கும் மத்தியில் கடுமையான போட்டி இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டியது.
இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் சின்ன சின்ன விஷயங்களும் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் தற்போது அமெரிக்காவில் இருக்கும் இந்திய வம்சாவளியினரின் வாக்குகள் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. அதிலும் குறிப்பாக ஸ்விக் ஸ்டேட்ஸ் என கூறப்படும் 6 மாகாணத்தில் இந்தியர்களின் வாக்குகள் முக்கியமானதாக மாறியுள்ளது.

அமெரிக்காவில் அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய ஏழு மாநிலங்கள் தான் ஸ்விக் பகுதிகளாகக் கூறப்படுகிறது. இதேபோல் இந்த 7 மாநிலத்தில் கிடைக்கும் வெற்றி தான் யார் அடுத்த அதிபர் என்பதைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இந்த மாநிலங்களில் வெறும் 10000 வாக்குகள் கூட தலையெழுத்தை மாற்றிவிடும் நிலைமை உள்ளதாக இந்த 7 மாநிலத்தில் இருக்கும் இந்திய அமெரிக்கர்களின் வாக்குகள் மிகவும் முக்கியமானதாக உள்ளது.
இந்திய-அமெரிக்க வாக்குகள்:
சமீபத்தில் ஆய்வின் தகவல் படி அமெரிக்க நாட்டில் இந்திய வம்சாவளியினர் சுமார் 52 லட்சம் பேர் வசிக்கின்றனர், இதில் சுமார் 39 லட்சம் பேர் 18 மற்றும் அதற்கு மேல் வயதுடையவர்கள். மேலும் அமெரிக்காவின் பிரபலமான கார்னகி எண்டோமென்ட் 2022ல் வெளியிட்ட அறிக்கையின்படி சுமார் 26 லட்சம் இந்திய அமெரிக்கர்கள் வாக்குரிமை பெற்று உள்ளனர்.
அமெரிக்க மக்கள் தொகையில் 26 லட்சம் என்பது சிறிய எண்ணிக்கையாக இருந்தாலும், தற்போது போட்டி கடுமையாக இருக்கும் காரணத்தால் இந்தியர்களின் வாக்குகள் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. கமலா ஹாரிஸ் இந்தியர் என்பதாலேயே இந்தியர்களின் வாக்குகள் அவருக்கு வந்துவிடாது, அமெரிக்காவில் வாக்குரிமை பெற்ற பலர் டிரம்ப்-க்கு ஆதரவாக உள்ளதையும் இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது கவனிக்க முடிந்தது.
எனவே 7 மாநிலத்தின் வாக்குகளும், இந்திய அமெரிக்கர்களின் வாக்குகளும் இந்த தேர்தலில் அதிகப்படியான கவனத்தைப் பெற்றுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications