இந்திய ராணுவம், கடற்படை , விமானப் படைகளில் சுமார் 1.55 லட்சத்திற்கும் மேல் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் அதிலும் குறிப்பாக ராணுவத்தில் அதிக அளவு காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் முப்படைகளில் சுமார் 1.55 லட்சம் பணியாளர்கள் பற்றாக்குறையை அரசு எதிர்கொள்வதாகவும், அதிலும் குறிப்பாக ராணுவத்தில் மட்டும் சுமார் 1.36 லட்சம் காலிப்பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் இருப்பதாகவும் மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் படை பற்றாக்குறை!
மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அஜய் பட் கூறுகையில் இந்திய ராணுவத்தில் ராணுவ மருத்துவப் படை மற்றும் ராணுவ பல் மருத்துவப் படை உள்ளிட்ட 8,129 அதிகாரிகள் பற்றாக்குறை இருப்பதாகக் கூறியுள்ளார்.
ஆயுதப்படை பணியாளர்கள்
மேலும் ஆயுதப்படை பணியாளர்கள் பற்றாக்குறை குறைக்கும் நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்பட்டு, காலியிடங்களை நிரப்பவும், இளைஞர்களை இச்சேவையில் சேர ஊக்குவிக்கவும் பல நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் பட் கூறியுள்ளார்.
ராணுவப் படை!
மிலிட்டரி நர்சிங் சர்வீஸில் (MNS) 509 பணியிடங்கள் காலியாகவும், 1,27,673 ஜேசிஓக்கள் மற்றும் பிற பதவிகளுக்கான இடங்களும் காலியாக உள்ளன. மேலும் ராணுவத்தால் பணியமர்த்தப்படும் சிவிலியன்களில் A குழுவில் 252 பணியிடங்களும், B குழுவில் 2,549 காலியிடங்களும், C குழுவில் 35,368 இடங்களும் உள்ளன என்றும் அமைச்சர் பட் தெரிவித்துள்ளார்.
கடற்படை!
கடற்படையில் மொத்தமாக 12,428 பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. அதில் 1,653 அதிகாரிகள், 29 மருத்துவ மற்றும் பல் மருத்துவ அலுவலர்கள் மற்றும் 10,746 மாலுமிகளுக்கான இடங்கள் பற்றாக்குறையாக இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விமானப்படை!
சிவில் ஊழியர்களில், குரூப் ஏ பிரிவில் 165 பேர், பி பிரிவில் 4207 பேர், குரூப் சியில் 6,156 பேர் பற்றாக்குறையாக உள்ளனர்.
மொத்தமாக 7,031 பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது எனவும், அதில் 721 அதிகாரிகள், 16 மருத்துவ அதிகாரிகள், 4,734 விமானப்படையினர் மற்றும் 113 விமானப்படையினர் மருத்துவ உதவியாளர்கள் பணியிடங்களில் பற்றாக்குறையாக இருப்பதாகவும்,
பணிபுரியும் பொதுமக்களில் குரூப் ஏ பிரிவில் 22 பேரும், பி பிரிவில் 1303 பேரும், சி பிரிவு 5531 பேரும் பற்றாக்குறையாக இருப்பதாக பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட் தெரிவித்துள்ளார்.
நடவடிக்கை!
பெண்கள் மற்றும் ஆண்களுக்கான Short Service Commission ஆஃபீசர்களுக்கான நிரந்தர கமிசன் வழங்கவும், NDA மூலம் ஆண்கள் மற்றும் பெண்கள் எளிதாக உள்நுழைய போதிய நடவடிக்கைகளையும், மேலும் இளைஞர்கள் முப்படைகளில் சேர ஊக்கமளிக்கும் விதத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் அமைச்சகம் எடுத்து வருவதாகவும் பட் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications