கர்னல் முதல் சிப்பாய் வரை! இந்திய ராணுவத்தினர் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்திய ராணுவம் தான் உலகிலேயே மிகப்பெரிய ராணுவப் படை. நாட்டின் எல்லைகளை பாதுகாப்பதிலும் சரி, போர் மற்றும் அமைதியை நிலைநாட்டுவதிலும் சரி அந்தந்த நாட்டின் ராணுவப் படையினர் தான் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்தக் கட்டுரையில் இந்திய ராணுவத்தில் உள்ள அனைத்து பதவிகளின் பட்டியல், சம்பளம், அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், ஒவ்வொரு பதவிக்கும் இருக்கும் பிரத்தியேக வசதிகள், போன்றவற்றை பார்ப்போம்.

பொதுவாக ராணுவப்படையில் உள்ள வீரர்களுக்கு நல்ல சம்பளம் வழங்கப்படுவதோடு இலவச மருத்துவ சிகிச்சை, குடியிருக்க வீடு, ஓய்வூதியம், பயணச் சலுகைகள் போன்ற பல நன்மைகள் வழங்கப்படுகிறது.

கர்னல் முதல் சிப்பாய் வரை! இந்திய ராணுவத்தினர் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. குறிப்பாக ஜம்மு & காஷ்மீர் பகுதியில் இந்த பதற்றம் இன்னும் அதிகமாக இருக்கிறது. அதற்கு காரணம் சமீபத்தில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இந்தியாவின் பகல்காம் பகுதியில் ஏராளமான அப்பாவி மக்களை சுட்டுக்கொன்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவும் ஆபரேஷன் சிந்தூர் எனப்படும் தாக்குதலை நடத்தியது.

ஆனால் இந்தத் தாக்குதல் முக்கியமாக தீவிரவாதிகளின் முகாம்கள், தீவிரவாதிகள் தங்கி இருக்கும் தளங்கள் ஆகியவற்றை மட்டுமே குறிவைத்து நடத்தப்பட்டது. இந்த சூழ்நிலையில், பாகிஸ்தான் நேற்று மீண்டும் ட்ரோன்களை இந்தியாவிற்கு அனுப்பியது. இந்திய ராணுவம் தற்போது விழிப்புடன் இருந்து வருகிறது.

2025 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்திய ராணுவத்தின் சீப் ஆர்மி ஸ்டாப்பாக ஜெனரல் மனோஜ் பாண்டே இருந்து வருகிறார். இவர் ஏப்ரல் 2022-ஆம் ஆண்டில் பொறுப்பேற்றார். தனது தலைமைத்துவத் திறன்கள் மற்றும் ராணுவ நடவடிக்கைகளில் ஆழ்ந்த அனுபவத்திற்காக நன்கு அறியப்பட்ட நபர்களில் மனோஜ் பாண்டேவும் ஒருவர். இந்திய ராணுவ அதிகாரிகளின் சம்பளத்தை பார்ப்போம்.

லெப்டினன்ட்: இவர்களுக்கு ரூ. 56,100 முதல் 1,77,500 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இதில் பயணப்படி மானிய விலையிலான வீடு போன்றவை அடங்கும்.

கேப்டன்: இவர்களுக்கு ரூ. 61,300 முதல் ரூ.1,93,900 வரையில் சம்பளம் வழங்கப்படுகிறது. இதில் யூனிபார்ம் அலோவன்ஸ், பயணச்சலுகைகள், காப்பீடு போன்றவை இவர்களுக்கு இலவசம்.

மேஜர்: இவர்களுக்கு ரூ. 69,400 முதல் 2,07,200 ரூபாய் வரையில் சம்பளம் வழங்கப்படுகிறது. ஸ்பெஷல் டியூட்டி அலோவன்ஸ், வீட்டு வசதி மற்றும் ஓய்வூதிய சலுகைகள் வழங்கப்படுகிறது.

லெப்டினன்ட் கர்னல்: இவர்களுக்கு ரூ. 1,21,200 முதல் ரூ. 2,12,400 வரையில் சம்பளம் வழங்கப்படுகிறது. இவர்களுக்கும் குடியிருப்பு வசதிகள், குழந்தைகளுக்கான கல்வி உதவி, கார் கடன் வசதி போன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது.

கர்னல்: இவர்களுக்கு ரூ. 1,30,600 முதல் ரூ. 2,15,900 வரையில் சம்பளம் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு அதிகபட்ச ஓய்வூதியம், குடியிருப்பு, விஐபி உபசரிப்பு போன்றவை வழங்கப்படும்.

Take a Poll

பிரிகேடியர்: இவர்களுக்கு ரூ. 1,39,600 முதல் ரூ. 2,17,600 வரையில் சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த அதிகாரிகளுக்கு அபிசியல் கார், குடியிருப்புகள், அதிகபட்ச டிராவல் அலோவன்ஸ் போன்றவை வழங்கப்படும்.

மேஜர் ஜெனரல்: இவர்களுக்கு ரூ.1,44,200 முதல் ரூ. 2,18,200 வரையில் சம்பளம் வழங்கப்படுகிறது. மருத்துவ பராமரிப்பு செலவுகள் மற்றும் வீட்டு வசதி ஆகியவையும் இவர்களுக்கு கொடுக்கப்படுகிறது

லெப்டினன்ட் ஜெனரல்: இவர்களுக்கு ரூ. 1,82,200 முதல் ரூ. 2,24,100 வரையில் சம்பளம் வழங்கப்படுகிறது.

ஜெனரல் ஆர்மி சீஃப்: இவர்களுக்கு ரூ. 2,50,000 என்ற பிக்சட் சம்பளம் வழங்கப்படுகிறது. அனைத்து அரசாங்க சலுகைகள் மற்றும் ஊழியர்களின் ஆதரவு என அனைத்தும் இவர்களுக்கு உண்டு.

இதுவரையில் பார்த்த அனைத்து பதவிகளும் உயர் பதவிகள் ஆகும். தற்போது அதற்கும் கீழ் இருக்கும் பதவிகளுக்கான சம்பளத்தை பார்ப்போம்.

நைப் சுபேதார்: இவர்களுக்கு ரூ. 35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. குடியிருப்புகள், ஓய்வூதியம், இலவச சுகாதாரம் போன்றவை வழங்கப்படும்.

சுபேதார்: இவர்களுக்கு ரூ. 44,900 முதல் ரூ.1,42,400 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. குழந்தைகள் கல்வி உதவி, கேண்டீன் வசதிகள் மற்றும் பயண சலுகைகள் போன்றவை இவர்களுக்கு உண்டு.

சுபேதார் மேஜர்: இவர்களுக்கு ரூ. 47,600 முதல் ரூ.1,51,100 வரை சம்பளம் வழங்கப்படுகிறது.

சிப்பாய்: சிப்பாய்களுக்கு ரூ. 21,700 முதல் 69,100 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு இலவச ஆடை, ரேஷன், அடிப்படை வீட்டு வசதி மற்றும் வருடாந்திர விடுப்பு ஆகியவை வழங்கப்படும்.

லான்ஸ் நாயக்: இவர்களுக்கு ரூ. 22,000 முதல் ரூ. 72,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது.

ஹவில்தார்: இவர்களுக்கு ரூ.29,200 முதல் ரூ.92,300 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இதைத் தவிர இந்திய ராணுவத்தில் உள்ள அனைத்து பதவிகளுக்கும் மருத்துவ வசதிகள், மானியம் போன்றவை வழங்கப்படும்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+