இந்திய ஆட்டோமொபைல் டிசம்பர் 2024 இல் கலவையான விற்பனையை பதிவு செய்து, 2025 ஆம் ஆண்டு வெற்றி பார்முலா-வை உருவாக்கி சந்தையில் அதிகப்படியான வாகனங்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற முக்கியமான திட்டத்தை தீட்டி வருகிறது.
இந்த நிலையில் டிசம்பர் மாத விற்பனை அளவுகள் தற்போது வெளியாகியிருக்கும் வேளையில் சில நிறுவனங்கள் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது, இதேவேளையில் சில நிறுவனங்கள் சறுக்கியும் உள்ளது.

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுசூகி, விற்பனையில் 29% வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்து மொத்தம் 1.78 லட்சம் வாகனங்களை விற்றுள்ளது. உள்நாட்டு விற்பனை 27% அதிகரித்து 1.41 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியுள்ளது.
ஆல்டோ மற்றும் எஸ்-பிரெஸ்ஸோ போன்ற மாடல்களை உள்ளடக்கிய நிறுவனத்தின் மினி பிரிவு 190% வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. பலேனோ, செலிரியோ, டிசயர், இக்னிஸ், ஸ்விஃப்ட் மற்றும் வேகன்ஆர் போன்ற பிரபலமான மாடல்களை உள்ளடக்கிய காம்பேக்ட் கார் பிரிவும் விற்பனையில் 20% வளர்ச்சியை கண்டுள்ளது. குறிப்பாக, எஸ்யூவி விற்பனை வருடாந்திர அடிப்படையில் 21% அதிகரித்தது.
இதேபோல் ஏய்ச்சர் மோட்டார்ஸ், உள்நாட்டு விற்பனை 1% அதிகரித்து 7,545 வாகனங்களை விற்பனை செய்துள்ளது, ஏற்றுமதி கணிசமான 52.6% உயர்ந்து 490 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
ஹூண்டாய் மோட்டார், மொத்த விற்பனையில் 2% குறைந்து 55,078 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி விற்பனையிலும் சரிவை சந்தித்துள்ளது ஹுண்டாய்.
பஜாஜ் ஆட்டோ கலவையான செயல்திறனைப் பதிவு செய்தது, மொத்த இரு சக்கர வாகன விற்பனை 4% குறைந்து 2.72 லட்சம் வாகனங்களை விற்று கடந்த ஆண்டை விடவும் குறைந்தது. இருப்பினும், வணிக வாகன விற்பனை 16% வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்து 50,952 வாகனங்களை விற்றுள்ளது.
கியா இந்தியா சிறப்பான விற்பனையை தொடர்ந்து பதிவு செய்து வருகிறது, 2024 ஆம் ஆண்டில் மொத்த விற்பனையில் 6% உயர்வுடன் 2,55,038 யூனிட்களுடன் தனது மிக உயர்ந்த வருடாந்திர விற்பனையை அடைந்தது.
மூன்று சக்கர வாகன உற்பத்தியாளரான அதுல் ஆட்டோ, உள்நாட்டு விற்பனையில் 13.7% வீழ்ச்சியை சந்தித்தது, அதே சமயம் மொத்த விற்பனையில் 3.2% அதிகரிப்பைக் கண்டது.
மேலும் எஸ்எம்எல் இசுசு மொத்த விற்பனையில் 33.8% வீழ்ச்சியை சந்தித்தது, பயணிகள் மற்றும் சரக்கு வாகன விற்பனையிலும் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டது. பல்வேறு பிரிவுகள் மற்றும் உற்பத்தியாளர்களிடையே இந்த மாறுபட்ட செயல்திறன் இந்திய ஆட்டோ சந்தை காட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications